பிரசாந்தா பெஹெரா
பிரசாந்தா பெகெரா (Prasanta Behera) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். [1] ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திலுள்ள சாலிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். [2][3] ஆரம்பகால வாழ்க்கைபிரசாந்தா பெகெரா 1977 ஆம் ஆண்டு கோபால் என்ற யாதவர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தர்மநந்தா பெகெரா ஒரு மூத்த அரசியல்வாதியும் ஒடிசா மாநிலத்தின் கட்டக் மாவட்டம் சவுத்வார் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கட்டக் நகரிலுள்ள கமலகாந்த வித்யாபீடத்தில் பள்ளிக் கல்வியும், சவுத்வார் கல்லூரியில் அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்றார். அரசியல் வாழ்க்கை2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் சாலிப்பூர் தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாசு சந்திர பெகெராவிடம் 2117 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [4] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரகாசு சந்திர பெகெராவை விட அதிகமான வாக்குகளைப் பெற்று பிரசாந்தா பெகெரா வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia