கட்டக் மாவட்டம்
கட்டக், ஒடிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கட்டக்கில் அமைந்துள்ளது.[4] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கஞ்சாமிற்குப் பிறகு, இது ஒடிசாவின் இரண்டாவது அதிக மக்கட் தொகை கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் 26,24,470 மக்கள் வசிக்கின்றனர். இம்மாவட்டத்தில் லலித்கிரி பௌத்த குடைவரைகள் உள்ளது. புவியியலும் காலநிலையும்இந்த மாவட்டம் 3932 கி.மீ.² பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் புவியியல் இருப்பிடம் 20.517 ° N அட்சரேகை மற்றும் 85.726 ° E தீர்க்கரேகை ஆகும். இந்த மாவட்டத்தின் சராசரி வருடாந்திர மழைவீழ்ச்சி சுமார் 1440 மி.மீ ஆகும். மழை வீழ்ச்சியில் பெருமளவு தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பதிவாகின்றது. கோடை காலம் (மார்ச் முதல் ஜூன் நடுப்பகுதி வரை) தவிர ஆண்டு முழுவதும் மிதமான வெப்பநிலையை கொண்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 41 °C ஆகும். மாவட்டத்தின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 10 °C ஆகும்.[5] பொருளாதாரம்கட்டாக் ஒடிசாவின் வணிக தலைநகராக பரவலாக அறியப்படுகிறது. ஒடிசாவின் அனைத்து நகரங்களுக்கிடையில் இது மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஏனெனில் அதன் பெரிய வணிக நிறுவனங்களால் இரும்பு உலோகக்கலவைகள், எஃகு, தளவாடங்கள் விவசாயம், பாரம்பரிய தொழில்கள், ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன. இந்த நகரத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. நகரிலிருந்து 85 கி.மீ தூரத்தில் உள்ள பாரதீப் துறைமுகம் பொருளாதார துறைக்கு உதவுகின்றது. பெரிய அளவிலான தொழில்கள்கட்டாக்கிலும் அதைச் சுற்றியும் 11 பெரிய அளவிலான தொழில்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சவுத்வார், ஆதாகர் மற்றும் இன்னும் பல இடங்களில் நடக்கின்றன . இந்தத் தொழில்களில் எஃகு, சக்தி, கனரக உற்பத்தி, உலோக கலவைகள், தீக்காப்பு களிமண் உற்பத்தி போன்றவை அடங்கும். நாட்டின் மிகப்பெரிய இரும்பு உலோக உற்பத்தியான இந்தியன் மெட்டல்ஸ் & ஃபெரோ அலாய்ஸ் (ஐ.எம்.எஃப்.ஏ) கட்டாக்கின் சவுத்வாரில் அமைந்துள்ளது . ஒரு பெரிய கனரக உற்பத்தி வளாகம் நகரின் புறநகரில் செயல்படுத்தும் கட்டத்தில் உள்ளது. பாரம்பரிய தொழில்கள்பாரம்பரிய தொழில்களில் கட்டாக்கின் மரபுவழியாக நடைப்பெறுகின்றது . ராய்ப்பூருக்குப் பிறகு கிழக்கு இந்தியாவில் நெசவுத் துறையின் இரண்டாவது பெரிய மையமாக இந்த நகரம் விளங்குகிறது. நகரின் ஆண்டு நெசவு வர்த்தகம் ஒரு பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது. நகரின் பெரிய நெசவு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டாக் சில்வர் ஃபிலிகிரியில் கைவினைப் பணிகளின் பிரபலமானவை. சிறந்த மற்றும் தனித்துவமான கைவினைப் பணிகள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு கணிசமாக சேர்க்கின்றன. விவசாயமும் சேவைத் துறைகளும்கட்டாக்கின் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. அருகிலுள்ள கிராமங்கள் பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் உயர்தர மற்றும் உபரி உற்பத்திக்கு பெயர் பெற்றவை. இவை வழக்கமாக நகரத்தின் உள்ளே சத்ரபஜாரில் மாநிலத்தின் மிகப்பெரிய மண்டியில் விற்கப்படுகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய அரிசி ஆராய்ச்சி நிறுவனமான மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ) இங்கு அமைந்திருப்பது நாட்டின் விவசாய வரைபடத்தில் கட்டாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. மாநிலத்தின் முன்னாள் தலைநகராகவும், ஒரு பெரிய வணிக மையமாகவும் இருப்பதால் மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் தனியார் கூட்டுறவு தாபனங்கள் ஏராளமாக கட்டாக்கில் உள்ளன. சேவைத் துறை மிகவும் பெரியது. அருகிலுள்ள மாவட்டங்களின் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நகரத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்கள். சேவைத் துறைக்கு பங்களிப்பு செய்கிறார்கள். ஒடிசா உயர்நீதிமன்றம் மற்றும் மாநிலத்தின் மிகப் பெரிய மருத்துவ நிறுவனமான எஸ்சிபி மருத்துவ மற்றும் கல்லூரி ஆகியவை சேவைத் துறைக்கு மேலும் பங்களிப்பு செய்கின்றன. ஒரியா திரைப்படத் துறையான ஆலிவுட் கட்டாக்கை மையமாகக் கொண்டு அதன் பொருளாதாரத்தை அதிகரிக்கிறது. ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் என்பவற்றிற்கு அண்டைய மாவட்டங்களில் இருந்து வருகைத் தருவதால் கல்வி ஒரு முக்கிய தொழிலாகும். புள்ளி விபரங்கள்2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கட்டாக் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,624,470 ஆகும்.[6] இந்த சனத்தொகை குவைத் தேசத்திற்கு[7] அல்லது அமெரிக்க மாநிலமான நெவாடாவுக்கு சமமானதாகும்.[8] இது இந்தியாவின் 640 மாவட்டங்களில் 156 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 666 மக்கள் அடர்த்தி (1,720 / சதுர மைல்) ஆகும்.[6] 2001-2011 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 11.86% ஆகும். கட்டாக் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 955 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது. மக்களின் கல்வியறிவு விகிதம் 84.2% ஆகும்.[6] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது இந்த மாவட்டத்தில் 91.36% மக்கள் ஒடியா , 4.66% உருது , 1.39% இந்தி , 0.86% பெங்காலி மற்றும் 0.78% தெலுங்கு ஆகிய மொழிகளை முதன்மை மொழியாகப் பேசினார்கள்.[9] உட்பிரிவுகள்இந்த மாவட்டத்தை 15 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[4] அவை: கட்டக், நியாளி, சாலேபூர், சவுத்வார், மாஹங்கா, கிசன்நகர், ஆட்டகட், படம்பா(பரம்பா), நரசிங்பூர், திகிரியா, பாங்கி, பாரங்க, கண்டாபடா, நிஸ்சிந்தகோயிலி, தமபடா ஆகியன. இறுதியாக உள்ள நான்கு வட்டங்களும் 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை.[10] இந்த மாவட்டத்தை படம்பா, பாங்கி, ஆட்டகட், பாராபாடி-கட்டக், சவுத்வார்-கட்டக், நியாளி, கட்டக் சதர், சாலேபூர், மாஹாங்கா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[4] இந்த மாவட்டம் கட்டக், கேந்திராபடா, ஜகத்சிங்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[4] போக்குவரத்துசான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia