மந்த வாயுச் சூழலில் பிரசியோடைமியத்துடன் அயோடினைச் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம்(III) அயோடைடு உருவாகும்:[1]
2Pr + 3I2 ---> 2PrI3
பிரசியோடைமியத்துடன் பாதரச(II) அயோடைடைச் சேர்த்து சூடுபடுத்தினாலும் பிரசியோடைமியம்(III) அயோடைடு உருவாகும்:[4]
2Pr + 3HgI2 --->2PrI3 + 3Hg
இயற்பியல் பண்புகள்
பிரசியோடைமியம்(III) அயோடைடு பச்சை நிற படிகங்களாக உருவாகிறது. இப்படிகங்கள் தண்ணீரில் கரையும்.[5] செஞ்சாய்சதுரப் படிகங்களாக உள்ள இவை நீருறிஞ்சும் தன்மை கொண்டவை.[1] Cmcm (எண். 63) என்ற இடக்குழுவில் a = 4.3281(6) Å, b = 14.003(6) Å மற்றும் c = 9.988(3) Å. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன்[6] பிரசியோடைமியம்(III) அயோடைடு PuBr3 வகை படிக உருவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.[4][7] இடைநிலை கட்டமான 2PrI3·PrOI மூலம் பிரசியோடைமியம் ஆக்சியயோடைடு மற்றும் பிரசியோடைமியம் ஆக்சைடு (5PrOI·Pr2O3) ஆகியவற்றின் கலவையாக சிதைகிறது.[8]
வினைகள்
பிரசியோடைமியம்(III) அயோடைடு ஐதரசீனுடன் சேர்ந்து I3Pr·3N2H4·4H2O போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. இவை வெளிர் நிறப் மஞ்சள் படிகங்கள் ஆகும். மெத்தனாலில் இவை கரையும். தண்ணீரில் சிறிதளவு கரையும். பென்சீனில் கரையாது. (d20 °C = 2.986 g/cm3)[9]
யூரியாவுடன் சேர்ந்து I3Pr·5CO(NH2)2 போன்ற சேர்மங்களைக் கொடுக்கிறது. இவை வெளிர் பச்சை நிறப் படிகங்களாகும்.[10]
தயோயூரியாவுடன் சேர்ந்து I3Pr·2CS(NH2)2·9H2O போன்ற சேர்மங்களைக் (d = 2.27 கி/செ.மீ3) கொடுக்கிறது. இவை பச்சை நிறப் படிகங்களாகும்.[5][11]
பிரசியோடைமியம்(III) அயோடைடு மற்ற இலேசான அருமண் அயோடைடுகள் (La-Ho) போன்ற அதே அமைப்பை ஏற்றுக்கொள்கிறது இதில் ஒரு முக்கோண மூவுச்சி பட்டகம், ஒன்பது நீரேற்ற அயனி ([Pr(OH2)9]3+ ) மற்றும் அயோடைடு அயனி ஆகியவை உள்ளன.[12]
பிரசியோடைமியம்(III) அயோடைடு உயர் வெப்பநிலையில் பிரசியோடைமியம் உலோகத்துடன் வினைபுரிந்து பிரசியோடைமியம் ஈரயோடைடைக் கொடுக்கிறது.
↑E. Warkentin, H. Bärnighausen (1979), "Die Kristallstruktur von Praseodymdiiodid (Modifikation V)", Zeitschrift für anorganische und allgemeine Chemie (in German), vol. 459, no. 1, pp. 187–200, doi:10.1002/zaac.19794590120{{citation}}: CS1 maint: unrecognized language (link)
↑Heiniö, Outi; Leskelä, Markku; Niinistö, Lauri; Tuhtar, Dinko; Sjöblom, Johan; Strand, T. G.; Sukhoverkhov, V. F. (1980). "Structural and Thermal Properties of Rare Earth Triiodide Hydrates.". Acta Chemica Scandinavica34a: 207–211. doi:10.3891/acta.chem.scand.34a-0207. பன்னாட்டுத் தர தொடர் எண்:0904-213X.