பிரசியோடைமியம் மென்மையான வெண்மையான மாழை. இது லாந்த்தனைடுகள் குழுவைச் சேர்ந்த ஒரு மாழை. இது யூரோப்பியம், லாந்த்தனம், சீரியம், அல்லது நியோடைமியம் ஆகியவற்றை விட காற்றில் அதிகம் அரிப்படையாதது, ஆனால் காற்றில் பசுமை நிறமுடைய ஆக்ஸைடாகின்றது. இதனால் பிரசியோடைமியத்தை எண்ணெய்க்கடையில் வைத்திருப்பர் அல்லது காற்றுபுகா கண்ணாடிக் குமிழுள் வைத்திருப்பர்.
பயன்பாடுகள்
வானூர்தி இயந்திரங்களைச் செய்ய தேவைப்படும் வலுவான மாழைக்கலவைகளுக்கான பிரசியோடைமியம் மக்னீசியத்துடன் சேர்க்கப்படுகின்றது.
பிரசியோடைமியம் கரிம மின்பொறி விளக்குகளில் பயன்படுகின்றது. இவ்வகை மின்விளக்குகள் திரைப்படங்கள் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகின்றது.
பிரசியோடைமியம் கண்ணாடிகளுக்கும் எனாமல்களுக்கும் மஞ்சள் நிறம் தருகின்றது. .
கனசதுர படிகவகை சிர்க்கோனியாவுக்கு பசும் மஞ்சள் நிறம் ஊட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
பற்றுவைப்புத் தொழிகளில் பயன்படுத்தும் கண்காப்புக் கண்ணாடிகளில் பயன்படுத்தும் டிடிமியம் (didymium) என்பதில் ஒரு கூட்டுப்பொருளாக பிரசியோடைமியம் பயன்படுகின்றது.
ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த முனைவர் மாத்த்யூ செல்லர்ஸ் (Dr. Matthew Sellars) அவருடைய சோதனைச்சாலையில் பிரசியோடைமியம் கலந்த சிலிக்கேட் படிகத்தில் ஒளியை நொடிக்கு வெறும் சில நூறு மீட்டர்களே செல்லுமாறு ஒளிவிரைவை குறித்துக் காட்டினார். செல்லுமாறு
பிரசியோடைமியம் கலந்த நிக்கல் (PrNi5) மிக வலுவான காந்தவெப்ப விளைவுப் பண்பைக் கொண்டிருப்பதால், இவ்விளைவைப் பயன்படுத்தி அடிப்படை வெப்பநிலை அளவீட்டுக்கோல்ல் சுழி வெப்பநிலைக்கு 1/1000 பாகை அளவுக்கு குளிர்விக்க முடிந்தது.[1].
ஃவுளூரைடு கண்ணாடியில் பிரசியோடைமியமத்தை மாசூட்டுப் பொருளாய் சேர்த்து ஒளிநார் மிகைப்பிகள் செய்துள்ளனர். Doping Praseodymium in fluoride glass can be used as single mode fiber amplifier
வரலாறு
பிரசியோடைமியம் என்னும் பெயர் கிரேக்க மொழியில் பச்சை என்னும் பொருள்படும் prasios மற்றும் இரட்டை என்னும் பொருள்படும் didymos என்னும் சொற்களில் இருந்து ஆக்கப்பெற்றது.
1841 ஆண்டு மோசாண்டர் (Mosander) என்பவர் லாந்த்தனா என்னும் கனிமத்தில் இருந்து டிடிமியம் என்னும் காரக்கனிமப் பொருளைப் பிரித்தெடுத்தார். 1874ல் பெர் டியோடோர் கிளீவ் (Lecoq de Boisbaudran) என்பவர் இந்த டிட்மியம் என்பது இரண்டு தனிமங்கள் கொண்டது என்று முடிவு செய்தார். 1879ல் லெக்காக் டி புவாபவுதிரான் (Lecoq de Boisbaudran) சமர்ஸ்க்கைட் என்னும் கனிமத்தில் இருந்து பெற்ற டிடியத்தில் இருந்து சமாரியம் என்னும் தனிமத்தைப் பிரித்தெடுத்தார். 1885ல், ஆஸ்திரியா நாட்டு வேதியியலாளர் கார்ல் அவெர் வான் வெல்ஸ்பாஃக் (Carl Auer von Welsbach]) டிடியத்தில் இருந்து பிரசியோடைமியம் நியோடைமியம் ஆகிய இரண்டையும் பிரித்தெடுத்தார். இவை வெவ்வேறு நிறமுடைய உப்புகள் ஈன்றன.
கிடைக்கும் மலிவு
பிரசியோடைமியம மிகச் சிறிய அளவிலேயே நில உலகின் புற ஓட்டில் இருந்து கிடைக்கின்றது. மில்லியன் பங்கில் 9.5 பங்கு (ppm) பிரசியோடைமியம ஆகும்.
Naturally occurring praseodymium is composed of one stable ஓரிடத்தான், 141Pr. Thirty-eight கதிரியக்க ஓரிடத்தான்s have been characterized with the most stable being 143Pr with a அரைவாழ்வுக் காலம் of 13.57 days and 142Pr with a half-life of 19.12 hours. All of the remaining கதிரியக்கம் isotopes have half-lives that are less than 5.985 hours and the majority of these have half-lives that are less than 33 seconds. This element also has six meta states with the most stable being 138mPr (t½ 2.12 hours), 142mPr (t½ 14.6 minutes) and 134mPr (t½ 11 minutes).
The isotopes of praseodymium range in atomic weight from 120.955 u (121Pr) to 158.955 u (159Pr). The primary கதிரியக்கம் before the stable isotope, 141Pr, is electron capture and the primary mode after is பீட்டா சிதைவு. The primary decay products before 141Pr are element 58 (சீரியம்) isotopes and the primary products after are element 60 (நியோடைமியம்) isotopes.
முற்காப்புக் குறிப்புகள்
மற்ற காரக்கனிம மாழைகள் போலவே பிரசியோடைமியமும் நச்சுத்தன்மை குறைந்த ஒரு பொருள்தான். உயிரினங்களின் இயக்கத்தில் பிரசியோடைமியத்தின் பங்கு ஏதும் இன்னும் அறியப்படவில்லை.