பிரசியோடைமியம்(III) புரோமைடு அறை வெப்பநிலையில் ஒரு பச்சை நிற திண்மமாகக் காணப்படுகிறது.[2][1] பொதுவாக இச்சேர்மம் தூளாக கையாளப்படுகிறது.
இயற்பியல் பண்புகள்
பிரசியோடைமியம்(III) புரோமைடின் மூலக்கூறு எடை 380.62 கிராம் ஆகும்.[2][3][4][5] இதன் அடர்த்தி 5.28 கி/செ.மி2 என அளவிடப்பட்டுள்ளது.[6][5]
UCl3 சேர்மத்தின் படிக அமைப்பை பிரசியோடைமியம்(III) புரோமை ஏற்றுக்கொள்கிறது.[7] பிரசியோடைமியம் அயனிகள் 9-ஒருங்கிணைப்புகளுடன் முக்கோணப் பட்டக வடிவவியலைப் பின்பற்றுகின்றன. பிரசியோடைமியம்-புரோமின் பிணைப்புகளீன் பிணைப்பு நீளம் 3.05 Å மற்றும் 3.13 ஆக உள்ளன.[8][9]
வேதிப் பண்புகள்
பிரசியோடைமியம்(III) புரோமைடு நீருறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மமாகும்.[4] சேர்மங்களில் 3 என்ற ஆக்சிசனேற்ற நிலை எண்ணில் பிரசியோடைமியம்(III) புரோமைடு வினையில் ஈடுபடுகிறது.[1]
தீங்குகள்
பிரசியோடைமியம்(III) புரோமைடு தோல் எரிச்சல் (H315/R38), கண் எரிச்சல் (H319/R36) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பிரசியோடைமியம்(III) புரோமைடு கலந்துள்ள காற்று, தூசி , புகை,வாயு, மூடுபனி போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். இதைப் பயன்படுத்தும்போது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர் கைகளை நன்கு கழுவி தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். கண்களில் பட நேர்ந்தால் கண்களை பலமுறை கழுவ வேண்டும்.[10]
↑Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1240–1241. ISBN0080379419.
↑Schmid, B.; Hälg, B.; Furrer, A. (1987). "Structure and crystal fields of PrBr3 and PrCl3: A neutron study". J. Appl. Phys.61: 3426–3428. doi:10.1063/1.338741.