பிரஜேந்திரநாத் தேபிரஜேந்திரநாத் தே (Brajendranath De) (1852 திசம்பர் 23 -1932 செப்டம்பர் 20) இவர் இந்திய ஆட்சிப்பணியின் ஆரம்பகால இந்திய உறுப்பினராவார். [1] ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விதே கொல்கத்தாவின் ஹரே பள்ளி, பின்னர் லக்னோவின் கேனிங் கல்லூரி பள்ளி மற்றும் கேனிங் கல்லூரியில் படித்தார். பள்ளியில் எப்போதும் தனது வகுப்பில் முதலிடம் வகித்த இவர், தனது இறுதித் தேர்வுகள் அனைத்திலும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதல் கலை தேர்வில் முதல் பிரிவில் முதலிடம் பெற்றார். ஆங்கில மாணவரான,இவர் தனது இளங்கலைத் தேர்வில் முதல் பிரிவில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் தனது முதுகலை த்தேர்வில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இவருக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. [2] பின்னர், இவர் தனது உயர் படிப்புகளுக்காக இங்கிலாந்து சென்றார். இவரது பெரிய மாமா, பியாரி சரண் சர்க்கார் மற்றும் இவரது தந்தையின் வழிகாட்டியான ராஜா தட்சிணரஞ்சன் முகர்ஜி, ஐக்கிய மாகாணங்களின் சங்கர்பூரின் வட்டாட்சியராகவும், சில காலம் லக்னோவின் உதவி ஆணையராகவும் பணியாற்றினார். இங்கிலாந்தில், போட்டித் தேர்வில் தேர்ச்சி வெறுவதற்காக இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்தார். தேர்வை வெற்றிகரமாக முடித்த இவர், 1873 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். [3] இவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த 8 வது இந்திய உறுப்பினராக இருந்தார். [4] பின்னர், 1875ஆம் ஆண்டு சூன் 7 ஆம் தேதி இவர் வழக்கறிஞராக சேர அழைக்கப்பட்டார். [5] பேராசிரியர் மாக்ஸ் முல்லர் மற்றும் திரு. இரசுலான் ஆகியோரின் சொற்பொழிவுகளில் கலந்து கொண்ட இவர் 1874-1875 வரை போடன் சமசுகிருத உதவித்தொகையில் ஒரு வருடம் கழித்த ஆக்சுபோர்டில் உள்ள புனித மேரி கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். [6] ஆக்சுபோர்டில் ஒரு கல்லூரியில் படித்த முதல் இந்திய வழக்கறிஞர் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இவர். [7] இவரது நான்காவது மகள் சரோஜ் நளினி தத் ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். [8] இவரது ஐந்தாவது மருமகன் ஜோதிசு சந்திர தே, [9], இந்திய மருத்துவ சேவையில் உறுப்பினராக இருந்தார். இவரது இரண்டு பேரக்குழந்தைகளில் பாடகர் உமா போசு [10] மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா ஆகியோர் அடங்குவர் . [11] தொழில்நிர்வாகம்இவர் 1875 ஆம் ஆண்டில் ஆட்சிப்பணியில் அர்ரா, பெகார் ஆகிய மாவட்டங்களில் உதவி நீதிபதியாக பணியாற்றினார். முந்தைய ஜமீந்தாரி தோட்டங்களின் ஆட்சிப் பகுதிகளான தர்பங்கா மற்றும் தும்ராவ் போன்ற மாவட்டங்களில் இவர் பணியாற்றினார். பெகாரில் பணியாற்றிய பின்னர், 1881 இல் வங்காளத்தின் ராணிகஞ்சில் பணியமர்த்தப்பட்டார். [12] பாங்குரா, வர்த்தமான் மற்றும் பரித்பூர் போன்ற பகுதியின் மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சித்தலைவராக பணியமர்த்தப்பட்டார். இவர் குல்னாவின் முழு மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சித்தலைவராக பணியாற்றினார், அங்கு இவர் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவரும், அரவிந்தரின் தந்தையுமான கிருட்டிணாதன் கோசு என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். [13] [14] இவர் ஒடிசாவில் உள்ள பாலேசுவர் மற்றும் பின்னர் மால்டா மற்றும் ஹூக்லி ஆகிய மாவட்டங்களின் நீதிபதி மற்றும் ஆட்சித்தலைவராக ஆனார். [15] ஹூக்லி மாநகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார். இவர் வர்த்தமான் பிரிவின் (செயல்) ஆணையராகவும் இருந்தார். [16] [17] ஹூக்லியின் மாவட்ட அதிகாரியாக, இவர் அங்கு இந்தியர்களுக்காக மட்டுமான டியூக் சங்கத்தைத் தொடங்கினார். [18] இவரது அலுவலக அதிகாரிகளிடம் ஒருமுறை பிரிட்டிசு சங்கத்தில் சேர விரும்புவதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று கூறினார். ஓய்வுக்குப் பிறகு இவர் கொல்கத்தா மேம்பாட்டு அறக்கட்டளையின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். [19] [20] கல்விப் பணிஆட்சியில் இருந்தபோதும் இவர் காளிதாசரின் 'விக்ரமர்வசி' மற்றும் 'மணிச்சூடபதானா' ஆகியவற்றை சமசுகிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். [19] இவர் ஒரு ஆங்கிலம்-வங்காளி அகராதியைத் வெளியிட்டுள்ளார். [17] மேலும், சென்னை சமூக சீர்திருத்தவாதி (1910) என்ற இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். தனது ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளில் கொல்கத்தாவின் ஆசிய சங்கத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். [21] [22] முஸ்லீம் வரலாற்றாசிரியர் நிசாமுதீன் அகமதுவின் தபாகத்-இ-அக்பரி என்ற இரண்டு தொகுதிகளின் இவர் மொழிபெயர்ப்பாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் முழுமையாகத் தயாரித்த மூன்றாவது தொகுதி, மரணத்திற்குப் பின் பைனி பிரசாத் மற்றும் எம். இதாயத் உசேன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. [23] [24] [2] மரபுஹூக்லியில் சின்சுரா பகுதியில் ஒரு சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது. [25] 1952 இல் இவரது நூற்றாண்டு விழாவின் போது, வங்காளம்-நாக்பூர் இரயில்வேயின் மூத்த அதிகாரியான இவரது இரண்டாவது மகன் வசந்த குமார் தே, [26] கொல்கத்தா ரெவியூ என்ற பத்திரிக்கையில் இவரது நினைவுகளின் மூன்று கட்டுரைகளில் வெளியிட முன்முயற்சி எடுத்தார். இந்தப் பணி கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் அப்போதைய தபன் ராய்சௌதுரியிடம் ஒப்படைக்கப்பட்டது. [27] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia