பிரியங்கா அருள் மோகன்
பிரியங்கா அருள் மோகன் (Priyanka Arul Mohan, பிறப்பு 20 நவம்பர் 1994) ஓர் இந்திய நடிகை ஆவார். பிரியங்கா மோகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். 2019-ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான ஒந்து கதே ஹேல்லா மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நானியின் கேங் லீடர் (2019), ஸ்ரீகரம் (2021) போன்ற தெலுங்குப் படங்களிலும், பின்னர் டாக்டர் (2021), எதற்கும் துணிந்தவன் (2022), டான் (2022) கேப்டன் மில்லர் (2023) போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். இளமைபிரியங்கா அருள் மோகன் ஒரு கன்னடத் தாய்க்கும் தமிழ்த் தந்தைக்கும் பிறந்தவர்.[1] தொழில்பிரியங்கா 2019 இல் கன்னடத் திரைப்படமான ஒந்து கதெ ஹேல்லாவில் அறிமுகமானார்.[2] அந்த ஆண்டின் பிற்பகுதியில், இவர் நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். மாயன் என்ற இருமொழித் திரைப்படத்தின் ஆங்கிலப் பதிப்பிற்காகவும் அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்; இருப்பினும், படம் தாமதமானது.[3] 2021-இல், நெல்சன் திலீப்குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[4] சூர்யா நடித்த தமிழ்த் திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்தார்.[5] டாக்டருக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் டான்' என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia