பிஸ்மத் சப்சாலிசிலேட்பெப்டோ-பிஸ்மால் என்ற பெயரில் பிஸ்மத் சப்சாலிசிலேட் (Bismuth subsalicylate) விற்பனை செய்யப்படுகிறது. இது அமிலத்தன்மையை சீர்ப்படுத்தவும், மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இது பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பிஸ்மத் சப்சாலிசிலேட்டின் விகிதசார மூலக்கூறு வாய்பாடு C7H5BiO4 ஆகும்.[1] இதன் கூழ்ம கரைசல் பிஸ்மத் சப்சாலிசிலேட்டை(Bi(C6H4(OH)CO2)3) நீராற்பகுத்து பெறப்படுகிறது. எனவே எளிதில் உட்கிரகிக்கப்படுகிறது. மருத்துவ பயன்கள்![]() சாலிசிலிக் அமிலத்தினுடைய வழிப்பொருளாக இருப்பதால் பிஸ்மத் சப்சாலிசிலேட்டு அழற்சி எதிர்ப்புப் பொருளாக செயலாற்றுகிறது.[2] மேலும் பாக்டீரியக்கொல்லியாகவும் இது செயல்படுகிறது.[3] இம்மருந்து அமிலநீக்கியாகவும் பயன்படுகிறது. விளைவுகள்இம்மருந்தினை தொடர்ச்சியாக எடுக்கும் போது நாவில் கரும் புள்ளிகள் தோன்றுகிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் கந்தகமே ஆகும். 6 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக எடுக்கும் போது விசத்தன்மையை ஏற்படுத்துகிறது. இன்ஃபுளுவென்சா மற்றும் சின்னம்மை நோய் தாக்கிய குழந்தைகள் இம்மருந்தினை எடுத்துக் கொள்ளக் கூடாது. சாலிசிலேட் எலிகளுக்கு கொடிய விசமாகும். எனவே எலிகளின் மீது பரிசோதிக்கக் கூடாது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia