பி. குனிகிருஷ்ணன்
பி. குனிகிருஷ்ணன் (பிறப்பு: 30 மே 1961) ஓர் இந்திய விண்வெளி அறிவியலார் ஆவார். இவர் தற்போது புகழ்பெற்ற மீத்தர அறிவியலார் ஆவார். மேலும், இவர் பெங்களூருவில் உள்ள யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தார்.[2] இந்திய அரசு விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[3] தனிப்பட்ட வாழ்க்கைகுனிகிருஷ்ணன் 1961 மே 30 அன்று கேரளாவின் பய்யனூரில் ஏ. கே. பி. சிந்த பொத்துவால், பி. நாராயணி அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[4] அவரது மனைவி கிரிஜா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (வி. எஸ். எஸ். சி) பொறியாளராக உள்ளார்..அவரது மகன்கள் நவநீத் கிருஷ்ணன், அரவிந்த் கிருஷ்ணன் ஆவர். குனிகிருஷ்ணன் ஒரு பயிற்சி பெற்ற இந்திய மரபுப் புல்லாங்குழல் கலைஞரும் ஆவார்.[5] கல்விகுனிகிருஷ்ணன் 1981 ஆம் ஆண்டில் பய்யனூர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் , பின்னர் 1986 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின்னணு, தகவல் தொடர்பு பொறியியலில் தொழில்நுட்ப இளவல் பட்டம் முடித்தார்.[4][6][7] தொழில் வாழ்க்கைதிருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு 1986 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (வி. எஸ். எஸ். சி) அமைப்புகள் நம்பகத் தன்மை நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்த அவர் , ஏ. எஸ். எல். வி - டி 1 முதல் பல்வேறு ஏவூர்தி பயணங்களுக்குப் பங்களித்தார். பிஎஸ்எல்வி - சி12, பிஎஸ்எல்சி - சி14 திட்ட இயக்குநராக பிஎஸ்எல்வி - சி15 முதல் பிஎஸ்எல்வி - சி27 வரை (2010 முதல் 2015 வரை) இணைத் திட்ட இயக்குநராகவும் ஊர்தி ஒருங்கிணைப்பு, சோதனைக்கான விஎஸ்எஸ்சி துணை இயக்குநராகவும் இருந்தார். திட்ட இயக்குநராக , இந்தியாவின் மதிப்புமிக்க செவ்வாய் சுற்றுகலன் திட்ட (பிஎஸ்எல்வி - சி 25 மூலம் மங்கள்யான்) உட்பட தொடர்ச்சியாக 13 வெற்றிகரமான பிஎஸ்எல்சி பயணங்களை இவரால் சாதிக்க முடிந்தது.[7] 2015 ஆம் ஆண்டில் , அவர் இந்தியாவின் விண்வெளி நிலையமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார்.[8] 2015 - 18 ஆம் ஆண்டில் இயக்குநர் என்ற முறையில் , எதிர்கால தேவையை நிறைவு செய்ய, ஆண்டுக்கு பல ஏவுதல்களை நிறைவேற்றுவதற்கான பெரிய உள்கட்டமைப்பை நிறுவியதனால் இந்திய விண்வெளி நிலையத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதில் இவர் முதன்மைப் பங்கு வகித்தார். இவரால் சிரீ அரிகோட்டாவில் உள்ள ' பார்வையாளர்கள் வளாகமான, 10,000 பார்வையாளர்களுக்கு செயற்கைக்கோள் ஏவுதல்களைக் காண உதவும் மையம் உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் , இசுரோவின் அனைத்து செயற்கைக்கோள்களையும் வடிவமைத்தல், மேம்படுத்தல் செயற்படுத்தலுக்கான நாட்டின் முன்னணி மையமான யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார்.[9] யுஆர்எஸ்சி இயக்குநராக , தேசிய தேவைகளுக்காக இந்தியாவின் செயற்கைக்கோள்களைச் செயற்படுத்தி , அந்தந்த வட்டணைகளில் அவை செயல்படுவதிலும் மையத்தை வழிநடத்தினார். இவரது தலைமையில் 13 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.[3] வியன்னாவை தலைமையிடமாகக் கொண்ட விண்வெளியின் அமைதியான பயன்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் குழுவின் (UNCOPUOS) முழு பணிக்குழுவின் (WGW) தலைவராக இருந்தார்.[3] இவர் இந்திய அறிவியல், பொறியியல் அமைப்புக் கழகத்தின் (ஐஎஸ்எஸ்இ) தேசியத் தலைவராக உள்ளார்.[3] இவர் 2020, பிப்ரவரி முதல் இந்திய அரசின் விண்வெளி ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.[3] தகைமைகளும் விருதுகளும் [7]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia