புகாரா பிராந்தியம்
புகாரா பிராந்தியம் ( பக்ஸோரோ பிராந்தியம் ) (Bukhara Region, உசுபேகிய மொழி , بۇحارا) என்பது உஸ்பெகிஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. கிசில்கும் பாலைவனம் இந்த பிரதேசத்தின் பெரும்பகுதியை கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக துருக்மெனிஸ்தான், நவோய் பிராந்தியம், காஷ்கடார்யோ பிராந்தியம், சோராஸ்ம் பிராந்தியத்தின் ஒரு சிறிய பகுதி, கரகல்பக்ஸ்தான் குடியரசு ஆகியவை உள்ளன. இது 39,400 கி.மீ. 2 பரப்பளவைக் கொண்டுள்ளது, மக்கள் தொகை 1,543,900 (2009 இன் இறுதி தரவுகளின்படி) என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்திய மக்களில் 71% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[1] பக்ஸோரோ பகுதி 11 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் தலைநகரம் புகாரா (2005 ஆம் ஆண்டின் இறுதியில் நகரின் மக்கள் தொகை 241,300 என இருந்தது).[1] மற்ற முக்கிய நகரங்களாக ஓலோட், கரகுல், கலோசியோ, காஸ்லி, ஜி’ஜிடுவோன் (மக்கள் தொகையானது 2005 இன் இறுதியில் 40,600 ), கோகோன் (மக்கள் தொகை 53,500, 2005 இன் இறுதியில்), ரோமிதன், ஷோபிர்கான், வப்கென்ட் ஆகியவை உள்ளன. காலநிலை என்பது பொதுவாக வறண்ட கண்ட காலநிலை ஆகும். பழைமையான நகரமான புகாராவானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இது "வாழ்க்கை அருங்காட்சியகம்" மற்றும் சர்வதேச சுற்றுலாவின் பிரபல மையமாக உள்ளது. நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கலை நினைவுச்சின்னங்கள் உள்ளன. பக்ஸோரோ பிராந்தியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள் உள்ளன. குறிப்பாக இயற்கை எரிவளி, பெட்ரோலியம், கிராபைட்டு, பெண்ட்டோனைட், பளிங்கு, கந்தகம், சுண்ணாம்பு, கட்டுமானத்திற்கான மூலப்பொருட்கள் போன்றவை ஆகும். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பருத்தி அரவை ஆலை, துணி மற்றும் பிற சிறு தொழில்கள் மிகவும் வளர்ந்துள்ளன.[2] பாரம்பரிய கைவினைகளான தங்க சித்திரத்தையல், மட்பாண்டங்கள், செதுக்கு வேலைப்பாடுகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. உஸ்கெகிஸ்தானில் கரகுல் செம்மறி ஆடு வளர்ப்பு தொழிலும் உள்ளது. நிர்வாக பிரிவுகள்![]()
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia