புத்தனத்தாணி
புத்தனத்தாணி (Puthanathani) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா) இல், கோட்டக்கல் மற்றும் வளஞ்சேரிக்கு இடையில் அமைந்துள்ளது. வைலத்தூர் (அதனால் திரூர் ) மற்றும் திருநாவாயாவுக்குச் செல்லும் சாலைகள் புத்தனத்தாணி வழியாக செல்கின்றன. மக்கள்தொகையியல்2011 ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புத்தனத்தணியில் 10,000 ஆண்கள், 10,480 பெண்கள் என மொத்தம் 20,480 பேர் இருந்தனர். புத்தனத்தாணி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் தற்போது வெளிநாடுகளில், பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். பண்பாடுபுத்தனத்தாணி முசுலிம்கள் செறிவாக வாழும் பிரதேசமாகும். இங்கு நடக்கும் மாலை நேரக் கூட்டங்களில் வணிக மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் தங்கள் கோயில்களில் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம் தங்கள் பாரம்பரியத்தை பேணி வருகின்றனர். கேரளத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் இந்து சடங்குகள் வழக்கமான பக்தியுடன் செய்யப்படுகின்றன. [2] புத்தனத்தாணி குறித்த அடிப்படை தகவல்கள்
போக்குவரத்துபுத்தனத்தாணி கோட்டக்கல் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 கோட்டக்கல் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பை ஆகியவற்றை இணைப்பதாக உள்ளது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர், பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 ஆகியவற்றால் இணைக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையமாக கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூர், திருன்னாவாய் தொடருந்து நிலையங்கள் ஆகும். கல்வி நிறுவனங்கள்புத்தானத்தாணியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளும், நான்கு கல்லூரிகளும், ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியும் உள்ளன.
ஆர்வமுள்ள இடங்கள்புத்தனத்தாணிக்கு அருகில் உள்ள ஆதவநாட்டில் அமைந்துள்ள அருவிகள் பதியத் குல்மினார்நெல்லித்தடம் காட்சி முணைஜமாலுல்லைலி ஜும்ஆ பள்ளிவாசல் சேலூர்புன்னத்தலா நரசிம்ம மூர்த்தி கோவில்மற்ற அடையாளங்கள்
மருத்துவமனைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia