புத்தி கெட்ட மனிதர் எல்லாம்
புத்தி கெட்ட மனிதர் எல்லாம் (Puththi Ketta Manitharellam) என்பது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] ராஜ் சிவராஜின் இயக்கத்திலும், ஜி. கிருசோபனின் தயாரிப்பிலும் வெளிவந்தது.[2] கே. எஸ். சாந்தகுமாரின் பாடல்களுக்கு பூவன் மதீசன் இசையமைத்திருந்தார்.[3] இத்திரைப்படம் 2021 திசம்பர் 24 அன்று யாழ்ப்பாணத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4] 2018 இல் வெளியான கோமாளி கிங்ஸ் இற்குப் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முதலாவது தமிழ்த் திரைப்படம் இதுவாகும். நடிகர்கள்
தயாரிப்புஇத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டது, இதன் நடிகர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் முன்னோட்டம் 2021 திசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[5][6] வெளியீடுஇத்திரைப்படம் 2021 திசம்பர் 24 முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் பல்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia