புத்லிபாய் காந்தி
புத்லிபாய் கரம்சந்த் காந்தி (1844 - 12 ஜூன் 1891), விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரான மகாத்மா காந்தியின் தாயார் ஆவார்.மேலும் இவர் முன்னாள் ராஜ்கோட் திவான் கரம்சந்த் காந்தியின் மூன்றாவது மனைவியுமாவார். அக்காலத்திய வழக்கப்படி இந்து மத பழக்கவழக்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் கடுமையாக எந்தவித சமரசமும் இல்லாமல் கடைபிடிக்கக்கூடியவரான புத்லிபாய், அப்போதைய ஜூனாகத் மாநிலத்தின் தந்த்ரானா என்ற கிராமத்தை சேர்ந்தவர். [3] புத்லிபாய் அவரது கணவரான கரம்சந்தை விட இருபத்தி இரண்டு வயது இளையவர் மேலும் கரம்சந்த்தின் முதல் இரண்டு மனைவிகள் சீக்கிரமே இறந்துவிட்டதாலும், அவர்கள் மூலம் அவருக்கு இருந்த இரண்டு மகள்களுக்காகவும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.புத்லிபாய் கரம்சந்த்துடன் இணைந்து நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களில் இளையவரும், அவரால் மோனியா என்று அன்புடன் அழைக்கப்பட்ட மோகன்தாஸ் அக்டோபர் 2, 1869 இல் பிறந்தார், அப்போது புத்லிபாய்க்கு முப்பது வயதாகும். மகாத்மா காந்தி அவரது சுயசரிதையான தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ட்ரூத் என்ற புத்தகத்தில் தனது தாயார் மற்றும் அவரது நிலைமைகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.[4]
இந்துக்கள் புனிதமாகக் கருதும் நான்கு மாதங்களில், இறைவனிடம் மனமார்ந்த முழு ஈடுபாடுடையவராக பூஜைகள் செய்வதுடன், காலையில் சூரியனைப் பார்த்து வணங்கிய பின்னரே காலை உணவை உண்ணும் வழக்கத்தை தன் குழந்தைகளுடன் தானும் கடைப்பிடித்தவர். [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia