புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம் (Puratchi Thalaivi Dr. J. Jayalalithaa CMBT Metro Station) சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள மெற்றோ இரயில் நிலையமாகும், இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் சென்னை மெற்றோவின் இரண்டாம் தாழ்வாரத்தில் வரும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெற்றோ-பரங்கிமலை தொரருந்து தொடரில் வரும் உயரமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முக்கியமாகப் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு வருவோருக்குச் சேவை செய்கின்றது. 31 ஜூலை 2020 அன்று, முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை நினைவு கூறும் விதமாக[1] தமிழக அரசு புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சி.எம்.பி.டி மெற்றோ என்று பெயரிட்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து மற்றும் மெற்றோ நிலையமாகும். கட்டுமான வரலாறுஇந்த நிலையத்தை ஒருங்கிணைந்த கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்பு (சி.சி.சி.எல்) கட்டியது. இந்த நிலையம் டிசம்பர் 2012இல் கட்டமைப்பு நிறைவடைந்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழநி மற்றும் அசோக் நகர் மெற்றோ நிலையங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த திட்டமாக ₹ 1,395.4 மில்லியன் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.[2] நிலையம்பிரதான முகப்பு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்குள் உயரமான நிலையமாகக் கட்டப்பட்டுள்ளது. தளங்களின் உயரம் சுமார் 15 மீட்டரும் தளங்களின் மொத்த நீளம் 140 மீட்டராகவும் உள்ளது. இந்த நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 23,000 பயணிகளைக் கையாள முடியும். [3] தளவமைப்பு
ஆதரவு உள்கட்டமைப்புகோயம்பேடு சந்திப்பிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் இந்நிலையம் அமைந்துள்ளது. ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் குறைந்தது மூன்று பாதசாரி சுரங்கப்பாதை திட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. [3] வணிக மையம்சென்னை மெற்றோ திட்டத்தின் முதல் கட்டமாக வணிக மையங்களாக மாற்றப்படுவதாக அடையாளம் காணப்பட்ட ஐந்து நிலையங்களில் இந்த நிலையம் ஒன்றாகும். மற்றவை அறிஞர் அண்ணா ஆலந்தூர், அரும்பாக்கம், ஈக்காட்டுத்தங்கல் மற்றும் அசோக் நகர் ஆகும். நில வசதியினைப் பொறுத்து நிலையத்தின் இரு முனைகளிலும் இரண்டு கட்டிடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. [4] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia