புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் (ஒரு சகாப்தம்) என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வியாழன் முதல் ஞாயிறு வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் வாழ்க்கை வரலாற்று நாடகத்தொடர் ஆகும்.[1] இது 26 செப்டம்பர் 2020 அன்று வெளியானது. இத்தொடர் நீதிபதி, சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி - பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.[2] இதில் ஆயுத் பானுஷாலி குழந்தை அம்பேத்கராகவம் மற்றும் பிரசாத் ஜவாடே வயதான அம்பேத்கராகவம் நடிக்கிறார்கள். இத்தொடர் & தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏக் மகாநாயக் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். என்ற இந்தி தொடரின் தமிழ் மொழிமாற்றம் ஆகும்.[3] கதைச்சுருக்கம்இது பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டது . இந்து மதம் மற்றும் பிற அம்சங்களுக்கு எதிரான போராட்டங்களையும் சவால்களையும் அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. நடிகர்கள்முக்கிய கதாபாத்திரங்கள்
துணை கதாபாத்திரங்கள்
வெளியீடுஇந்த தொடர் பல்வேறு மொழிகளில் வெளியிட்டுள்ளது - தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம்.[4] நடிப்புஆயுத் பானுஷாலி மற்றும் பிரசாத் ஜவாடே முறையே அம்பேத்கர் வேடத்தில் நடிக்கின்றனர். பிம்ராவ் தந்தையின் பாத்திரத்திற்கு ஜெகந்நாத் நிவாங்குனே தேர்வு செய்யப்பட்டார், பீம்ராவ் தாயாக நடிகை நேஹா ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுத் மன்சூரி, அதர் கான், வான்ஷிகா யாதவ், சப்னா தேவல்கர் மற்றும் ஃபால்குனி டேவ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இவற்றை பார்க்கஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia