புளுட்டோனியம்(III) அயோடைடு
புளுட்டோனியம்(III) அயோடைடு (Plutonium(III) iodide) என்பது PuI3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது. தயாரிப்புபுளுட்டோனியத்துடன் பாதரச(II) அயோடைடு வினைபுரிவதால் புளுட்டோனியம்(III) அயோடைடு உருவாகிறது:[3]
புளுட்டோனியமும் ஐதரசன் அயோடைடும் 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்தாலும் புளுட்டோனியம்(III) அயோடைடு உருவாகிறது. இவ்வினையில் சிறிதளவு ஆக்சஜன் மற்றும் நீர் மட்டுமே பங்கேற்றாலும் உருவாக்கப்படும் புளுட்டோனியம்(III) அயோடைடு உடனடியாக புளுட்டோனியம் அயோடைடு ஆக்சைடு ஆக நீராற்பகுப்பு அடைகிறது.[3]
பண்புகள்புளுட்டோனியம்(III) அயோடைடு 777 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். பச்சை நிற திடப்பொருளாக இது காணப்படுகிறது. a = 433 பைக்கோமீட்டர், b = 1395 பைக்கோமீட்டர் மற்றும் c = 996 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்கள் கொண்டதாக Ccmm (எண். 63) என்ற இடக்குழுவுடன் புளுட்டோனியம்(III) புரோமைடு போல நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் புளுட்டோனியம்(III) அயோடைடு படிகமாகிறது.[2] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia