இயற்பியலில், ஈர்ப்பு முடுக்கம் அல்லது புவியீர்ப்பு முடுக்கம் (gravitational acceleration) என்பது இழுவை ஏதுமற்ற வெற்றிடம் ஒன்றில் ஒரு பொருள் வீழ்ச்சி அடையும் போது அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் ஆகும். இது ஈர்ப்பு விசையால் ஏற்படுத்தப்படும் ஒரு நிலையான வேக அதிகரிப்பாகும். பொருட்களின் திணிவுகள் அல்லது கலவைகளைப் பொருட்படுத்தாமல், அனைத்துப் பொருட்களும் ஒரே விகிதத்தில் வெற்றிடத்தில் முடுக்கி விடப்படுகின்றன.[1]
மேற்பரப்பில் ஒரு நிலையான புள்ளியில், புவியின் ஈர்ப்பின் அளவு புவியீர்ப்பு மற்றும் புவியின் சுழற்சியின்மையவிலக்கு விசை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவால் விளைகிறது.[2][3] பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு புள்ளிகளில், குத்துயரம், நிலநேர்க்கோடு, நிலநிரைக்கோடு ஆகியவற்றைப் பொறுத்து சுயாதீன வீழ்ச்சி முடுக்கம் 9.764 முதல் 9.834 மீ/செ2 (32.03 முதல் 32.26 அடி/செ2) வரை இருக்கும்.[4] ஒரு வழக்கமான நிலையான மதிப்பு சரியாக 9.80665 மீ/செ2 (32.1740 அடி/செ2) என வரையறுக்கப்படுகிறது. இந்த மதிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாட்டின் இடங்கள் புவியீர்ப்பு முரண்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. மேலுதைப்பு அல்லது இழுவை போன்ற பிற விளைவுகள் இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
உலகளாவிய விதியுடனான தொடர்பு
நியூட்டனின் உலகளாவிய ஈர்ப்பு விதி எந்த இரண்டு பொருட்களுக்கிடையேயும் ஒரு ஈர்ப்பு விசை உள்ளது என்று கூறுகிறது. இதன் சமன்பாடு பின்வருமாறு:
↑This value excludes the adjustment for centrifugal force due to Earth's rotation and is therefore greater than the 9.80665 m/s2 value of திட்ட புவியீர்ப்பு முடுக்கம்.
↑Hofmann-Wellenhof, B.; Moritz, H. (2006). Physical Geodesy (2nd ed.). Springer. ISBN978-3-211-33544-4. § 2.1: "The total force acting on a body at rest on the earth’s surface is the resultant of gravitational force and the centrifugal force of the earth’s rotation and is called gravity."{{cite book}}: CS1 maint: postscript (link)
↑Hirt, C.; Claessens, S.; Fecher, T.; Kuhn, M.; Pail, R.; Rexer, M. (2013). "New ultrahigh-resolution picture of Earth's gravity field". Geophysical Research Letters40 (16): 4279–4283. doi:10.1002/grl.50838. Bibcode: 2013GeoRL..40.4279H.