பெசிமர் செயல்முறை

பெசிமர் மாற்றி, திட்ட வரைபடம்

பெசிமர் செயல்முறை (Bessemer process) என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும். 1855 ஆம் ஆண்டு இச்செயல் முறையின் மீது காப்புரிமை பெற்ற அதன் கண்டுபிடிப்பாளர் என்றி பெசிமர் என்பவரின் பெயராலேயே இச்செயல் முறை அழைக்கப்படுகிறது. இச்செயல் முறை 1851 ஆம் ஆண்டிலேயே வில்லியம் கெல்லி [1][2] என்பவரால் தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்துறை உற்பத்தி தவிர, கரியூட்டல் இல்லாத காற்றில் வறுத்தல் செயல்முறை ஐரோப்பாவுக்கு வெளியே பல நூறாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது[3]. வார்ப்பிரும்பைக் காற்றின் மூலம் ஆக்சிசனேற்றத்திற்கு உட்படுத்தி, இரும்பில் உள்ள மாசுக்களை அகற்றுவது முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆக்சிசனற்ற வினை, வெப்பத்தை அதிகரிக்கச் செய்து இரும்புத் தாதுவை வார்ப்பு நிலையிலேயே நீடிக்கவும் செய்தது.

பெசிமர் செயல்முறையில், கொள்கலத்தின் உட்புறமாக தீக்களிமண் பூசப்படுவது அடிப்படைச் செயலாகும். இக்காப்பு பூச்சு "கில்கிறிஸ்டு தாமஸ் செயல்முறை" என்று அதைக் கண்டுபிடித்தவரான சிட்னி கில்கிறிஸ்டு தாமஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

விளக்கம்

பெசிமர் மாற்றியின் பாகங்கள்.

ஆக்சிசனேற்றம்

ஆக்சிசனேற்ற வினை தேவையற்ற மாசுக்களான சிலிக்கான் , மாங்கனீசு, கரிமம் போன்றவற்றை ஆக்சைடுகளாக வெளியேற்றுகிறது. இந்த ஆக்சைடுகள் வளிமமாகவோ திட கழிவாகவோ அகற்றப்படுகிறது. மாற்றியில் பூசப்பட்டுள்ள தீக்களிமண் பூச்சு இச்செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வார்ப்பிரும்புத் தாதுவிலுள்ள மாசுக்களைப் பொறுத்து இப்பூச்சு மாறுபடுகிறது. பாசுபரசு குறைவாக உள்ள வார்ப்பிரும்பு எனில் அமில பெசிமர் முறையும் பாசுபரசு அதிகமாக உள்ள வார்ப்பு இரும்பு எனில் கார பெசிமர் முறையும் கையாளப்படுகிறது. உதாரணமாக, வார்ப்பிரும்பில் மாங்கனீசு என்ற காரம் அசுத்தமாக இருந்தால் பெசிமரில் சிலிக்கா பூசுவதை அமில பெசிமர்முறை என்றும் வார்ப்பு இரும்புத் தாதுவில் கந்தகம், பாசுபரசு போன்ற அமிலத்தன்மை மாசுக்கள் இருந்தால் காரத்தன்மை கொண்ட டோலமைட்டு அல்லது மாக்னசைட்டு மாற்றியில் பூசப்படுகிறது. இறுதியாக, தேவைப்படும் எஃகின் தன்மைக்கு ஏற்ப தேவையான பொருட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

திட்ட செயல்முறை

வார்ப்பு இரும்பு தேவையான எஃகு இரும்பாக மாறியவுடன், இலேசான மாசுக்களை கலனிலேயே விட்டுவிட்டு, எஃகு இரும்பை அகப்பையில் ஊற்றி தேவையான அச்சுக்கு பின்னர் இடமாற்றம் செய்யப்படுகிறது. வார்ப்பு இரும்பில் குளிர் காற்று ஊதப்பட்டு எஃகு இரும்பாக மாறும் செயல்முறை இருபது நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இம்மாற்றம் நிகழும் காலத்தில் மாசுக்கள் ஆக்சிசனேற்றம் அடைதலின் வேகத்தை மாற்றியின் வாய்ப் புறமிருந்து இருந்து வெளிவரும் சுடரின் தோற்றம் தீர்மானிக்கிறது. இச்சுடரின் பண்புகளைப் பதிவு செய்யும் நவீன ஒளிமின் பதிவுகள் எஃகின் இறுதி தரத்தினை முடிவு செய்வதற்கேற்ப ஊதுகுழலை கட்டுபடுத்துவதற்கு பேருதவியாக இருக்கிறது. ஊதல் செயல்முறை முடிந்தபிறகு பெறப்படும் திரவ எஃக்கில் நிர்ணயிக்க்ப்பட்ட அளவுக்கு கார்பன் நீக்கம் செய்து பயன்பாட்டிற்கேற்ற உலோகங்கள் சேர்த்து உலோகக் கலவை தயாரிக்கப்படுகிறது. பெசிமர் மாற்றியில் ஒரே நேரத்தில் 5 முதல் 30 டன் [4] வரை வார்ப்பு இரும்பை ஏற்றம் செய்யலாம். ஒவ்வொரு முறையும் இரும்பு ஏற்றம் மாற்றியில் முதலில் கிடைமட்டமாகவும் பின்னர் செங்குத்தாகவும் வைத்து செயல்படுத்தப்படுகிறது.

முன்னோடி செயல்முறைகள்

பிட்ஸ்பெர்க்கில் உள்ள பெசிமர் மாற்றி

மேற்கோள்கள்

  1. "Bessemer process". Britannica 2. (2005). Encyclopædia Britannica. 168. அணுகப்பட்டது 2005-08-06. 
  2. "Kelly, William". Britannica 6. (2005). Encyclopædia Britannica. 791. அணுகப்பட்டது 2005-08-06. 
  3. Ponting, Clive (2000), World History, A New Perspective, Pimlico, ISBN 0-7126-6572-2
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-17. Retrieved 2014-10-03.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya