பெத்தானியாபுரம்
பெத்தானியாபுரம் (ஆங்கிலம்: Bethaniapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5] 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை, பெத்தானியாபுரம் பகுதியின் மக்கள் 'மாமதுரை மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா 2023' என்ற பெயரில் சமத்துவப் பொங்கல் விழாவாகக் கொண்டாடினார்கள்.[6] கடல் மட்டத்திலிருந்து சுமார் 164 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெத்தானியாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°56′10″N 78°05′39″E / 9.936100°N 78.094300°E ஆகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம் ஆகியவை பெத்தானியாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். பெத்தானியாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் அலுமினியப் பாத்திரங்கள் தயாரிக்கும் ஆலைகளின் சுகாதார அபாயக் கழிவுகள் வைகை ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு, பெத்தானியாபுரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மாசுபடுகின்றன.[7] தமிழக அரசின் முயற்சித் திட்டமான திடக்கழிவு மேலாண்மைக்காக, பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களைப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பெத்தானியாபுரமும் ஒன்று.[8] பெத்தானியாபுரத்தில் இயங்கும் மாநகராட்சிப் பூங்காவான அம்மா குழந்தைகள் பூங்கா, ஊஞ்சல்கள், சறுக்குகள் போன்ற விளையாட்டு உபகரணங்களுடன் கட்டப்பட்டுள்ளது.[9] பெத்தானியாபுரத்தில் இயங்கி வரும் தனியார் மதுபானக் கூடத்தை, அந்த இடத்தில் இருந்து அகற்றக் கோரி ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.[10] பெத்தானியாபுரம் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[11] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia