பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Company Affairs, MCA) இந்திய அரசின் ஓர் அமைச்சரகம் ஆகும். இந்திய தனியார்த்துறை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் இந்திய நிறுமங்கள் சட்டம், 1956 மற்றும் தொடர்புடைய சட்டங்களை செயற்படுத்துவது இந்த அமைச்சகத்தின் பொறுப்பு ஆகும். இந்தியாவின் தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவனங்களை கட்டுப்படுத்தும் முதன்மை பொறுப்பு இந்த அமைச்சரகத்திற்கு உள்ளது. இதன் அமைச்சராக தற்போது நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்
நிர்வாகம்இந்த அமைச்சகம் கீழ்வரும் சட்டங்களின் செயலாக்கத்தை நிர்வகிக்கிறது:
ஆகத்து 2013-இல் இந்திய நிறுமங்கள் சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது. இது பெருநிறுவனங்கள் ஈடுபடும் ஏமாற்றுக்களை கட்டுப்படுத்தும். இந்தியாவில் நிகழ்ந்த சத்தியம் நிறுவன ஊழல் போன்ற கணக்கு மரபு நயக்கேடுகளைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.[1] இது 21-ஆவது நூற்றாண்டுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவியலாத 1956-இன் நிறுமங்கள் சட்டத்திற்கு மாற்றாக அமையும்.[2] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia