"பெரோஸ்" (Pi-ro-ysa) ( குப்தர் எழுத்துமுறையில் ) என்ற பெயர் "காந்தாரப் பகுதிகளில்" கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் காணப்படுகிறது, இது கிடாரைட்டுகளுக்கு சொந்தமானது என்று கருதப்படுகிறது. மற்றொரு பக்கம் செங்குத்தாக: வலது புறம்:கா-தா-கா-ரா என எழுதப்பட்டுள்ளது மத்தியில்: பிரொய்சா ( என்ற பெயர் காணப்படுகிறது. அனேகமாக இது பெரோஸ் எனக் கருதலாம்.[1] இடது புறம்: இதன் பொருள் அறியப்படவில்லை. ஆனால் கு-சா-னா என படிக்கப்படுகிறது.[2] சுமார் 350-375 பொ.ச.
குசான-சாசானியர்களின் ஆட்சி, பொ.ச. 4-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முடிவடைந்தது. [5] அவர்கள் தங்கள் பகுதிகளை கிடாரைட்டுகளிடம் இழந்தனர். [6]
பெரோஸ் முதல் கிடாரைட்டு ஆட்சியாளர் கிரடாவின் வாரிசு ஆவார். மேலும் பிரபலமான கிடாரைட்டு ஆட்சியாளர் முதலாம் கிடாரனின் உடனடி முன்னோடி ஆவார்.[4] இவர் குசான சாசானிய குசான்ஷா ஆட்சியாளர்களில் கடைசி ஒருவராக முன்னர் கருதப்பட்டார்.
"குசானர்களின் மன்னர்" எனப்பொருள் தரும் "குசான்ஷா" என்ற பட்டத்தைப் பயன்படுத்தி இவர் தனது சொந்த நாணயங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
அமிடா முற்றுகை (359 பொ.ச.)
பொ.ச.359-இல் இவர், அமிடா மீது தாக்குதல் நடத்தியதாக வரலாற்றாசிரியர் கோடாதாத் ரெசாகானி கூறுகிறார். அங்கு கிரம்பேட்சின் கீழ் ஒரு கிடாரைட்டு இராணுவம் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்ட நகரத்தை முற்றுகையிட இரண்டாம் சாபூரின் சாசானிய இராணுவத்திற்கு ஆதரவளித்ததாக அறியப்படுகிறது.[7] வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மார்செலினஸ் இவரது ஆடையைப் பற்றியும், இவரது தலைக்கவசத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.[8]
ஆட்டுக் கொம்புகள் கொண்ட தலைக்கவசம் அணிந்த பெரோஸ், 359 பொ.ச.வில் அம்மியனஸ் மார்செலினஸ் என்பவரால் அமிடா முற்றுகையின் போது கவனிக்கப்பட்டிருக்கலாம்.[9]
இந்த ஆட்சியாளர் பாரம்பரியமாக இரண்டாம் சாபூர் என்று கருதப்படுகிறார். இருப்பினும் அம்மனுஸ் மார்செலினஸ் வெளிப்படையாக அவ்வாறு கூறவில்லை, மேலும் சாபூரின் பாரம்பரிய தலைக்கவசமும், கிரீடமும் மிகவும் வித்தியாசமானது. [10] செம்மறியாட்டுக் கொம்புடன் கூடிய தலைக்கவசம் பெரோஸின் பல நாணயங்களில் சாசானிய பாணியில் காணப்படுவதைப் போலவே இருக்கும். [11] அம்மியனஸ் மார்செலினஸ் மேலும் குறிப்பிடுகிறார், அவர் சாபூர் என்று கருதும் மன்னன், பெர்சியர்களால் "சான்சான்" மற்றும் "பைரோசென்" என்று அழைக்கப்பட்டார். இது உண்மையில் கிழக்கு ஹூனப் பழங்குடியினரின் ஆட்சியாளரான "ஷாஹான்சா பெரோஸை"க் குறிக்கலாம். [12]
குசான-சசானியர்களின் பாணியில் நாணயங்கள்
குசான பாணியில் உள்ள இவரது நாணயங்களைத் தவிர, பெரோஸ் சாசானிய பாணியில் வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் குசான-சாசானிய ஆட்சியாளர் முதலாம் வராக்ரனின் பெயரை அடிக்கடி உபயோகித்துள்ளார். மேலும் அதில் வராக்ரன் ஆட்டுக்கடா கொம்புகளுடன் ஒரு சிறப்பான சாசானிய தலைக்கவசத்தை அணிந்திருப்பதையும் காட்டுகிறார். [13]
முதலாம் வராக்ரனின் பெயரில் பெரோஸின் நாணயம்.[14] ஒரு பக்கம்:சசானிய தலைக்கவசமும் கொம்புகள் கொண்ட கிரீடமும்; பிராமி எழுத்தில் “பி” என உள்ளது. பலிபீடத்தில் உதவியாளர்களுடன் நிற்பது போலவும் பிராமியில் "நாம்" என எழுதப்பட்டுள்ளது.[15]
பெரோஸின் நாணயம். மார்பளவு முகம் தெரிகிறது. மேலும், ரிப்பன்களுடன் ஆட்டுக்கடாவின் கொம்புகள் கொண்ட கிரீடம் அணிந்துள்ளார். பிராமியில் பி-ரோ என உள்ளது./ மறுபக்கம்: இரண்டு பணியாளர்களால் சூழப்பட்ட நெருப்பு பீடம்.[16][17][14]
குசான-சாசானிய ஆட்சியாளர் முதலாம் வராக்ரனின் பெயரில் கிடாரைடுகளின் முத்திரையுடன் வெளியிடப்பட்ட பெரோஸின் நாணயம் (செம்மறி ஆட்டின் கொம்புகள் சேர்க்கப்பட்டுள்ளது). சுமார் பொ.ச.330 365. பல்கு நாணயம்.[14]
சான்றுகள்
↑Tandon, Pankaj (2009). "The Western Kshatrapa Dāmazāda". The Numismatic Chronicle169: 177.
Daryaee, Touraj; Rezakhani, Khodadad (2017). "The Sasanian Empire". In Daryaee, Touraj (ed.). King of the Seven Climes: A History of the Ancient Iranian World (3000 BCE - 651 CE). UCI Jordan Center for Persian Studies. pp. 1–236. ISBN9780692864401.
Payne, Richard (2016). "The Making of Turan: The Fall and Transformation of the Iranian East in Late Antiquity". Journal of Late Antiquity (Johns Hopkins University Press) 9: 4–41. doi:10.1353/jla.2016.0011.