தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசினால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய (2002ஆம் ஆண்டின் எண் 27) சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலா ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இப்பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது. பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடதிட்டங்களை வழங்குகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் சேருவது எளிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளும் வேண்டியவாறு எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பணிசார் பாடங்கள் (vocational courses) செய்தொழிலில் அறிவுப்பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை வளர்க்கவும் பயனுள்ளதாக உள்ளன. 2011ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதி இப்பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக கட்டிடத்தை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் கல்வி வளாகத்தில் திறந்து வைத்தார்.[2] இப்பல்கலைகழகத்தில் 2013-2014ம் கல்வியாண்டு முதல் அனைத்துத் துறைகளிலும் நிறைஞர் (M.Phil). மற்றும் முனைவர் (Ph.D.) ஆகிய ஆராய்ச்சிப் பட்டப்படிப்புகள் பகுதி (Part-time) மற்றும் முழுநேர (Full-time) முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக 18.01.2013 முதல் முனைவர் திருமதி சந்திரகாந்தா ஜெயபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். வழங்கப்படும் பாட திட்டங்கள்இளநிலை பட்டப்படிப்புகள்:
முதுநிலை பட்டப்படிப்புகள்:
பட்டயப் படிப்புகள்:
முதுநிலை பட்டயப் படிப்புகள்:
சான்றிதழ் படிப்புகள்:
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia