பைரவி (திரைப்படம்)
பைரவி (Bairavi) என்பது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். பாஸ்கர் இயக்கினார். கதை உரையாடல் எழுதி கலைஞானம் தயாரித்தார்.[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் அறிமுகப்படுத்தபட்ட கீதா முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்தார். சுதீர், மனோரமா, சுருளி ராஜன் ஆகியோர் மற்ற முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் 8 சூன் 1978 அன்று வெளியானது.[2] இது ரஜினிகாந்தின் 25 வது படமாகும். கதைமூக்கையாவும் அவரது தங்கை பைரவியும் சிறுவயதில் ஒரு விபத்தில் பிரிந்துவிடுகின்றனர். இதைத் தொடர்ந்து, ஒரு பணக்காரரின் மனைவி மூக்கையாவை வளர்க்கிறார். அவருக்கு ஏற்கனவே ராஜலிங்கம் என்ற ஒரு மகன் உள்ளார். ராஜலிங்கத்தின் தீய செயல்களுக்கு துணைபோவகக்கூடியவனாக மூக்கையா இருக்கிறான். ராஜலிங்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பாக்யம் என்ற இளம் பெண்ணைக் கடத்திவரும்படி மூக்கையாவை ஏவுகின்றான். அவனும் பாக்கியத்தைக் கடத்தி வருகின்றான். மூக்கையா இல்லாத நேரத்தில் ராஜலிங்கம் அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். பாக்யத்தின் வளர்ப்பு சகோதரன் மாணிக்கம் இந்த நிகழ்வை அறிகிறான். காவல் துறையினர் மாணிகத்தை விசாரிக்கும்போது, பாக்யம்தான் பைரவி என்பதை மூக்கையா அறிகிறான். பின்னர் உடனடியாக ராஜலிங்கத்தை அணுகி பைரவியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறான்; முதலில் அதை ஏற்க அவன் தயாராக இல்லை, ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு பைரவியை மணப்பதாக மூக்கையாவிடம் உறுதியளிக்கிறான். பைரவியை கடத்தியவன் மூக்கையா என்பதால், அவன்தான் குற்றவாளி என்று சந்தேகிக்கும் காவல் துறையினர், மூக்கையாவைப் பற்றி அறிய ராஜலிங்கத்தின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூக்கையா பைரவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜலிங்கம் காவல் துறையினரிடம் குற்றம் சாட்டுகிறான். ராஜலிங்கத்தின் சாட்சியத்தின் அடிப்படையில் காவலர்கள் மூக்கையாவை கைது செய்கின்றனர். இதற்கிடையில், மருத்துவமனையில் மயக்க நிலையில் இருக்கும் பைரவியை கொல்ல ராஜலிங்கம் திட்டமிட்டுகிறான். பைரவி நினைவு திரும்பி காவலர்களிடம் சாட்சியமளித்தால் தனக்கு தண்டனை கிடைக்கும், என்பதால் அவன் அவளைக் கொல்கிறான். தன் வளர்ப்புத் தங்கையின் கொலையை அறிந்த பிறகு, பைரவியின் மரணத்திற்குக் காரணமானவன் என்று தான் கருதும் மூக்கையாவை பழிவாங்க மாணிக்கம் சபதம் செய்கிறான். இதற்கிடையில், இந்த நிகழ்வு பற்றி அறிந்த மூக்கையா சிறையில் இருந்து தப்பிக்கிறான். பின்னர் தனது தங்கையின் மரணத்திற்கு ராஜலிங்கத்தைக் கொல்ல முடிவெடுக்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதே கதையாகும் நடிகர்கள்
தயாரிப்புகலைஞானம் சாண்டோ சின்னப்பத் தேவரின் படங்களுக்கு தொடர்ச்சியாக கதை எழுதிவந்தார். அதனால் கலைஞானத்தை படத்தை தயாரிக்குமாறும், அப்படத்திற்கு தான் நிதி உதவி செய்வதாகவும் கூறினார். எனவே கலைஞானம் விஸ்ரூபம் என்ற கதையை எழுதினார். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் படத்திற்கு தங்கையின் பெயரான பைரவி என்ற பெயரை வைத்தார். அப்போது எதிர்மறைப் பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்தின் நடிப்பு பாணி கலைஞானத்தைக் கவர்ந்தது. பைரவி படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்து முன்பணம் கொடுத்தார். புதுமகங்களை நாயகனாக நடிக்க வைப்பதில்லை என்ற எண்ணம் கொண்ட சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் ரஜினியை நாயகனாக நடிக்க வைப்பதை விரும்பவில்லை. அவரை எதிர்மறை பாத்திரத்தில் நடிக்கவைக்குமாறு கலைஞானத்திடம் கூறினார். அதற்கு கலைஞானம் மறுக்கவே பைரவி படத்திற்கு நிதி உதவி செய்ய மறுத்துவிட்டார். பின்னர் அப்போது பிரபல விநிதோகத்தராக இருந்த காதர் (ராஜ்கிரண் உடந்தை மணாளன் உள்ளிட்ட சிலர் கொடுத்த முன்பணத்தைக் கொண்டு படப் பணியைத் தொடங்கினார்.[4] எதிர்மறை வேடத்தில் நடிக்க கலைஞானம் முத்துராமனை அணுகினார், ஆனால் அவர் எதிர்மறை வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார், இறுதியில் ஸ்ரீகாந்தை அந்த வேடத்திற்கு பேசி முடித்தார். எம். பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[5][6][7] இசைஇப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தவர். சிதம்பரநாதன் எழுதிய "கட்ட புள்ள குட்டபுள்ள" பாடலைத் தவிர அனைத்து பாடளையும் கண்ணதாசன் எழுதினார்.[8]
வெளியீடுபைரவி திரைப்படம் 1978 சூன் 8 அன்று வெளியானது.[2] படம் சுப்பிரமணிய பிலிம்ஸ் நிறுவனத்தால் விநியோகிகம் செய்யபட்டது.[9] படத்தை விளம்பரப்படுத்த எஸ். தாணு பிளாசா திரையரங்கில் ரஜினிகாந்துக்கு 35 அடி உயர வெட்டுருவத்தை வைத்தார். சுவரொட்டிகளில், ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்" என்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டார், இருப்பினும் அவர் முதலில் இதை எதிர்த்தார்.[10][11][12] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia