பொட்டாசியம் பைடார்டரேட்டு
பொட்டாசியம் பைடார்டரேட்டு (Potassium bitartarate) பொட்டாசியம் ஐதரசன் டார்டரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு KC4H5O6 ஆகும். இது மது தயாரிப்பின் போது கிடைக்கும் துணை விளைபொருள் ஆகும். சமையலில் இது தாட்டர்ச்சாரம் என அழைக்கப்படுகிறது. இது டார்டாரிக் அமிலத்தின் பொட்டாசியம் அமில உப்பிலிருந்து (ஒரு கார்பாக்சிலிக் அமிலம் ) பதப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக கிடைக்கும் தூள் வடிவ அமிலத்தை அடுமனைத் தொழில் அல்லது துப்புரவுக் கரைசலாக (எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகர் போன்ற அமிலக் கரைசலுடன் கலக்கும்போது) பயன்படுத்தலாம். கிடைக்கும் விதம்திராட்சை சாற்றை நொதிக்கச் செய்யும் போது பொட்டாசியம் பைடார்டரேட்டு மதுக்குடுவையில் படிகமாக்குகிறது. மேலும், குடுவைகளில் உள்ள மதுவை வெளியேற்றும் படிகங்கள் (ஒயின் வைரங்கள்) பெரும்பாலும் 10° செல்சியசு (50° பாரன்கீட்) குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மது நிரப்பப்பட்ட குடுவைகளில் தக்கையின் அடிப்பகுதியில் உருவாகும். மேலும், எப்போதாவது இயற்கையாகவே மதுவில் கரைந்துவிடும். இந்த படிகங்கள் குளிர்ந்த அல்லது சிறிது நேரம் நிற்க அனுமதிக்கப்பட்ட புதிய திராட்சை சாற்றிலிருந்து வெளியேறும்.[1] வீட்டில் திராட்சை பழப்பாகில் அல்லது பழக்கூழில் படிகங்கள் உருவாதலைத் தடுக்க, படிகமயமாக்கலை ஊக்குவிக்க முன்னதாகத் தேவைப்படும் புதிய திராட்சை சாற்றை ஒரே இரவில் குளிர்விக்க வேண்டும். பொட்டாசியம் பைடார்டரேட்டுப் படிகங்கள் பருத்தித்துணியின் இரண்டு அடுக்குகளின் மூலம் வடிகட்டுவதன் மூலம் அகற்றப்படுகின்றன. வடிகட்டப்பட்ட சாறு பின்னர் பழப்பாகு அல்லது பழக்கூழ் கூழ்மமாக மாற்றப்படலாம்.[2] சில சந்தர்ப்பங்களில் அவை குளிர்ந்த கொள்கலனின் பக்கத்தோடு ஒட்டிக்கொண்டு வடிகட்டலை தேவையற்றதாக ஆக்குகின்றன. பண்படா வடிவம் (மண்டிகப்படலம் என அழைக்கப்படுகிறது) சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பல சமையல் மற்றும் பிற வீட்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளை நிறமுள்ள, மணமற்ற, அமிலத்தன்மையுள்ள தூள் தயாரிக்கப்படுகிறது. பயன்பாடுகள்உணவில்![]() உணவில், பொட்டாசியம் பைடார்டரேட்டு பின்வரும் காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது:
கூடுதலாக இந்த உப்பு கீழ்க்காண்பனவற்றில் பகுதிப்பொருளாக பயன்படுகிறது:
வீட்டு உபயோகப் பயன்பாட்டில்பொட்டாசியம் பைடார்டரேட்டை எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகர் போன்ற அமில திரவத்துடன் கலந்து பித்தளை, அலுமினியம் அல்லது தாமிரம் போன்ற உலோகங்களுக்கு பசை போன்ற துப்புரவுக் காரணியை உருவாக்கலாம் அல்லது பீங்கானிலிருந்து ஒளிக்கறைகளை அகற்றுவது போன்ற பிற துப்புரவு பயன்பாடுகளுக்கு தண்ணீருடன் கலக்கலாம். தாட்டர்ச்சாரம் பெரும்பாலும் பாரம்பரிய சாயமிடுதலில் பயன்படுத்தப்பட்டது. அங்கு டார்ட்ரேட் அயனிகளின் சிக்கலான நடவடிக்கையானது, டின் குளோரைடு மற்றும் ஆலம் போன்ற நிறமூன்றி உப்புகளின் கரைதிறன் மற்றும் நீராற்பகுப்பை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டது. தாட்டர்ச்சாரம், ஐதரசன் பெராக்சைடுடன் ஒரு பசையாகக் கலக்கப்படும்போது, சில கைக் கருவிகளில் இருந்து துருவை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த பசையானது பயன்படுத்தப்பட்டு சில மணி நேரம் இறுக அனுமதிக்கப்படுகிறது, பின்னர் ரொட்டி சோடா / நீர் கரைசலில் கழுவப்பட வேண்டும். மீண்டுமொரு முறை தண்ணீர் கொண்டு நன்கு கழுவிய பின்னர் நன்கு உலர்த்திய பின், ஒரு மெல்லிய எண்ணெய் பூச்சு அரத்தை மேலும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும். அழகு சாதனப் பொருட்களில்முடிக்குச் சாயமிடுவதற்காக, பொட்டாசியம் பைடார்டரேட்டானது மருதாணியுடன் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவையில் பொட்டாசியம் பைடார்டரேட்டானது ஒரு மிதமான அமிலமாகச் செயல்பட்டு மருதாணியின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia