மகனே நீ வாழ்க
மகனே நீ வாழ்க (Magane Nee Vazhga) 1969 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். நடிகர்கள்பாடல்கள்இத்திரைப்படத்திற்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
வெளியீடும் வரவேற்பும்மகனே நீ வாழ்க 1969 சூலை 25 அன்று வெளியிடப்பட்டது.[4] இந்தியன் எக்சுபிரசு இத்திரைப்படத்தை "ஒரு நல்ல கதையை மிகைப்படுத்திச் சொல்வதன் மூலம் அதை எப்படிக் கெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு" என்றும். "பலவீனமான, திறமையற்ற திரைக்கதை, சமமான எளிமையான இயக்கம் போன்றவை திரைப்படத்தின் உண்மையான சிக்கல்" என்றும் எழுதியது. ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், அஞ்சலி தேவி திரைப்படத்தில் வீணாகிவிட்டதாகவும், இராகவனும் விஜயகுமாரியும் குறைந்த காட்சிகளில் தோன்றினாலும் படத்தை அழிவிலிருந்து காப்பாற்றியதாகவும் விமர்சகர் உணர்ந்ததாக எழுதினார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia