சி. ஆர். விஜயகுமாரி

சி. ஆர். விஜயகுமாரி
பிறப்பு27 ஏப்ரல் 1936 (1936-04-27) (அகவை 89)
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்மோகனா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1953-2003
பெற்றோர்(கள்)ராமசாமி (தந்தை)
தங்கலட்சுமி (தாயார்)
வாழ்க்கைத்
துணை
எஸ். எஸ். ராஜேந்திரன்
(1961-1973)
(இறப்பு 2014)[1]
பிள்ளைகள்இரவிக்குமார் (பி.1963)[2]

விஜயகுமாரி (பிறப்பு: 27 ஏப்ரல் 1936) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும், இவர் அன்றைய முன்னணி நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனின் மனைவியும் ஆவார்.

முன் வாழ்கை

விஜயகுமாரி தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ராமசாமி, தங்கலட்சுமி இணையருக்கு இரண்டவது மகளாகப் பிறந்தார்.[3]

திரை வாழ்வு

ஏவிஎம் தயாரிப்பில் 1956 இல் வெளியான குலதெய்வம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் கல்யாண பரிசு (1959) படத்தில் நடித்து புகழ்பெற்றார். ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) படத்தில் ஜெமினி கணேசனின் தங்கையாக நடித்தார். அப்படம் இந்தியில் ராஜ்திலக் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டபோது அதிலும் விஜயகுமாரி நடித்தார். அதன் பிறகு வந்த இந்திப்பட வாய்புகளை மறுத்து தமிழ்ப் படங்களிலேயே கவனம் செலுத்தினார்.

விஜயகுமாரி சிவாஜி கணேசனுடன் அவரது மகளாக பார் மகளே பார் திரைப்படத்திலும், முறைபெண்ணாகவும், காதலியாகவும் குங்குமம் திரைப்படத்திலும், தங்கையாக பச்சை விளக்கு, சாந்தி, சவாலே சமாளி, சித்ரா பௌர்ணமி திரைப்படங்களிலும், மனைவியாக ராஜ ராஜ சோழன் திரைப்படத்திலும், அக்காவாக அன்பைத்தேடி திரைப்படத்திலும் நடித்துள்ளார். 60-களில் முன்னணி இயக்குநர்களான ஸ்ரீதரின் முதல் படமான " கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் திரைப்படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் பெண் என்றால் பெண் ஆகியவற்றில் நடித்துள்ளார். அவர் நடித்த சில திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்தன. காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் , ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் திரைப்படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்கை

இவர் திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனைத் திருமணம் புரிந்து கொண்டார்.[4] 1961 முதல் 1973 வரை 12 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.[5] இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்தனர். இந்த இணையருக்கு 1963 இல் பிறந்த இரவிக்குமார் என்றொரு மகன் உள்ளார்.[6]

நடித்த சில திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1953 நால்வர் தமிழ்
1958 பெற்ற மகனை விற்ற அன்னை தமிழ்
1958 பதிபக்தி தமிழ்
1958 வஞ்சிக்கோட்டை வாலிபன் தமிழ்
1959 அழகர்மலை கள்வன் தமிழ்
1959 கல்யாணப் பரிசு தமிழ்
1959 நாட்டுக்கொரு நல்லவள் தமிழ்
1960 தங்கரத்தினம் தமிழ்
1960 தங்கம் மனசு தங்கம் தமிழ்
1961 குமுதம் தமிழ்
1961 பணம் பந்தியிலே தமிழ்
1962 ஆலயமணி தமிழ்
1962 தெய்வத்தின் தெய்வம் தமிழ்
1962 எதையும் தாங்கும் இதயம் தமிழ்
1962 முத்து மண்டபம் தமிழ்
1962 பாத காணிக்கை தமிழ்
1962 போலீஸ்காரன் மகள் தமிழ்
1962 சாரதா தமிழ்
1962 சுமைதாங்கி தமிழ்
1963 குங்குமம் தமிழ்
1963 ஆசை அலைகள் தமிழ்
1963 கைதியின் காதலி தமிழ்
1963 காஞ்சித் தலைவன் தமிழ்
1963 மணி ஓசை தமிழ்
1963 நானும் ஒரு பெண் தமிழ்
1963 நீங்காத நினைவு தமிழ்
1963 பார் மகளே பார் தமிழ்
1964 அல்லி தமிழ்
1964 பச்சை விளக்கு தமிழ்
1964 பாசமும் நேசமும் தமிழ்
1964 பூம்புகார் தமிழ்
1965 ஆனந்தி தமிழ்
1965 காக்கும் கரங்கள் தமிழ்
1965 பணம் தரும் பரிசு தமிழ்
1965 பூமாலை தமிழ்
1965 சாந்தி தமிழ்
1966 அவன் பித்தனா தமிழ்
1966 கொடிமலர் தமிழ்
1966 மணி மகுடம் தமிழ்
1967 சுந்தர மூர்த்தி நாயனார் தமிழ்
1967 விவசாயி தமிழ்
1967 கணவன் தமிழ்
1967 பவானி தமிழ்
1968 கல்லும் கனியாகும் தமிழ் சிறப்புத் தோற்றம்
1968 நீயும் நானும் தமிழ்
1968 தேர்த் திருவிழா தமிழ்
1968 ஜீவனாம்சம் தமிழ்
1969 அவரே என் தெய்வம் தமிழ்
1969 மனைவி தமிழ்
1971 சவாலே சமாளி தமிழ்
1973 ராஜராஜ சோழன் தமிழ்
1973 அன்பைத் தேடி தமிழ்
1976 சித்ரா பௌர்ணமி (திரைப்படம்) தமிழ்
1983 தங்க மகன் தமிழ்
1984 நான் மகான் அல்ல தமிழ்
1986 மாவீரன் தமிழ்
1990 பெரிய இடத்து பிள்ளை தமிழ்
1993 அரண்மனைக்கிளி தமிழ்
1993 ஆத்மா தமிழ்
1996 பூவே உனக்காக தமிழ்
1997 தர்ம சக்கரம் தமிழ்
2000 தெனாலி தமிழ்
2003 காதல் சடுகுடு தமிழ்

மேற்கோள்கள்

  1. "S.S. Rajendran: Dialogue delivery was his forte". thehindu.com. Retrieved 5 January 2015.
  2. "Potpourri of titbits about cinema - Vijayakumari". kalyanamalaimagazine.com. Retrieved 5 January 2015.
  3. அன்றைய நாயகிகள், விஜயகுமாரி, லட்சிய நடிகை!, கட்டுரை ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை சித்திரை மலர் 2021 பக்கம்: 194-195
  4. [1]
  5. "Vijayakumari Biography". profiles.lakshmansruthi.com. Archived from the original on 17 January 2014. Retrieved 5 January 2015.
  6. https://antrukandamugam.wordpress.com/2013/09/09/vijayakumari/

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya