மகேஷ் ஜெத்மலானி
மகேஷ் ஜெத்மலானி (Mahesh Jethmalani) இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மாநிலங்களவை நியமன உறுப்பினர்|மாநிலங்களவை நியமன உறுப்பினரும் ஆவார்.[1] இவர் மறைந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் மகன் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக 2012 வரை செயலாற்றியவர்.[2] வழக்கறிஞர் தொழில்1980ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்த மகேஷ் ஜெத்மலானி, 12 பிப்ரவரி 1981 முதல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் தொடங்கினார்.[3] மகேஷ் ஜெத்மலானி மகாராட்டிரா முன்னாள் முதல்வர் ஏ. ஆர். அந்துலே மீதான ஊழல் வழக்கில் அந்துலே சார்பாக வாதாடினார். மேலும் இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடினார்.[3] அரசியல்2009 பொதுத்தேர்தலில் மகேஷ் ஜெத்மலானி மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2021ல் மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[4] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia