பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு (National Executive of Bharatiya Janata Party), பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவானது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் குழு ஆகும். இக்குழு கட்சியின் ஒட்டுமொத்த மூலோபாயங்கள் மற்றும் கொள்கை முடிவை எடுக்கிறது. பஜகவின் தலைவரால் நியமிக்கப்படும் 120 உறுப்பினர்களைக் கொண்டது இக்குழு. 120 கொண்ட தேசிய செயற்குழுவில் தற்போது 80 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். [1]மீதம் 40 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு உதவிட தேசிய செயற்குவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 7 துணைத் தலைவர்கள், 5 பொதுச் செயலாளர்கள், ஒரு பொதுச் செயலாளர் (அமைப்பு), ஒரு பொருளாளர் மற்றும் 5 செயலாளர்கள் செயல்படுவர். கட்சி அரசியலமைப்பின் விதிகளை இயற்றுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் மற்றும் விதிகளை விளக்குவதற்கும் தேசிய செயற்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. இக்குழுவின் முழு அமர்வு அல்லது தேசிய கவுன்சிலின் சிறப்பு அமர்வின் மூலம் திருத்தத்திற்கு உட்பட்ட கட்சி அரசியலமைப்பை தேசியத் தலைவர் திருத்தலாம், மாற்றலாம் மற்றும் சேர்க்கலாம். தேசிய செயற்குழு தலைவர் கட்சியின் தேர்தல்களை மேற்பார்வையிடுவதுடன், கட்சியின் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது. நடப்பு தேசிய செயற்குழு உறுப்பினர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia