மட்டிலா குருமூர்த்தி
மட்டிலா குருமூர்த்தி (Maddila Gurumoorthy)(பிறப்பு 22 சூன் 1985) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேசத்தினைச் சார்ந்த தற்போதைய இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2020-ல், திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் பல்லி துர்கா பிரசாத் ராவ் இறந்ததைத் தொடர்ந்து 2021 ஏப்ரல் 17 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.[1][2][3][4] நாடாளுமன்ற உறுப்பினராக2021ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமியினை எதிர்த்து ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2,71,592 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.[5] இவர் [6] மே 2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். நாடாளுமன்றத்தில் இவரது தனிப்பட்ட வருகை 91% ஆகும்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia