மணல்மேடு
மணல்மேடு (ஆங்கிலம்:Manalmedu), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[3][4][5] மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு. அமைவிடம்சீர்காழி - கும்பகோணம் சாலையில் அமைந்த மணல்மேடு பேரூராட்சி, வைத்தீஸ்வரன் கோயில் 10 கி.மீ; கும்பகோணம் 30 கி.மீ; மயிலாடுதுறை 18 கி.மீ.; காட்டுமன்னார்கோயில் 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் மயிலாடுதுறையில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு15.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] மக்கள் வகைப்பாடு2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2,329 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட மணல்மேடு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9,017 ஆகும். அதில் 4,558 ஆண்கள் ஆகவும், பெண்கள் 4,459 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 908 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 82.72% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.85% ஆகவும், இசுலாமியர் 1.40% ஆகவும், கிறித்தவர்கள் 1.71% ஆகவும், பிறர் 0.04 % ஆகவும் உள்ளனர்.[7] [8] மணல்மேட்டிற்கு நாகநாதபுரம் என்ற பழைய பெயரும் உண்டு.[சான்று தேவை] மணல்மேட்டில் இயங்கி வந்த நூற்பாலை தற்போது அரசினர் கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது, இரண்டு மேல்நிலை பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அருகமைந்த கிராமங்கள்
ஆகிய கிராமங்கள் மணல்மேடு பேரூராட்சியில் அடங்கும். புகழ் பெற்றவர்கள்
ஆலயங்கள்
என்ற தேவாரப் பதிகத்தை சுந்தரர் பாடினார். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 30-ஆவது தலம்.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia