மண்டகத்தே பறவைகள் சரணாலயம்
மண்டகத்தே பறவைகள் சரணாலயம் (Mandagadde Bird Sanctuary) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிமோகா நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மண்டகத்தே கிராமத்திற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளது. 1.14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளாலும் துங்கா நதியாலும் சூழப்பட்டுள்ளது. சிமோகாவிலிருந்து தீர்த்தல்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் சரணாலயம் உள்ளதால் இங்கு எளிதில் சென்றடைய முடியும். வற்றாத துங்கா நதியால் சூழப்பட்ட தீவு என்பதால், இந்த இடத்திற்கு புலம்பெயர்ந்த பறவைகள் வந்து அடைகாக்கும். சரணாலயம்நாட்டிலுள்ள 20 முக்கியமான சரணாலயங்களில் ஒன்றான மண்டகத்தே சரணாலயம் சூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பறவைகளை அதிக அளவில் ஈர்க்கிறது. சூலை முதல் செப்டம்பர் வரை, ஆகத்து மாதத்தின் உச்ச பருவத்தில், பல வகையான பறவைகள் சரணாலயம் உள்ள இத்தீவில் முட்டையிடுகின்றன. பருவமழையின் போது துங்கா நதியில் தீவு ஓரளவு மூழ்கும் என்பதால் பறவைகள் கூடு கட்ட மரங்களின் மேல் கிளைகளை விரும்புகின்றன. பருவ காலத்திதில் 5,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பறவைகள் கூடு கட்டுவதற்கு இந்த சரணாலயம் ஒரு முக்கியமான இடமாகும். வினோதமான இச்சிறிய தீவில் கொக்கு, கரும்புள்ளி மீன்கொத்தி, வெண் கழுத்து நாரை, இராக் கொக்கு, அகலவாய் நாரை போன்ற பல்வேறு வகை பறவைகள் இங்கு காணப்படுகின்றன.[1] பல்வேறு வகையான பறவைகளை பார்வையிட கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடு கட்டும் பறவைகளை நெருக்கமாகப் பார்க்க இங்கு படகு சவாரியும் செய்யலாம்.[2] பறவைகள்![]() பருவ காலத்தில் மூன்று வகையான புலம்பெயர்ந்த பறவைகள் சரணாலயத்தின் பசுமையான சுற்றுப்புறங்களுக்கு கூட்டமாக வந்து டிசம்பர் மாதம் வரை இருக்கின்றன.[3]
ஆகத்து மாதம் நிலவும் உச்ச பருவத்தில், 5,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4] ![]() மண்டகத்தேக்கு சிமோகாவிலிருந்து 30 கிலோமீட்டரும் மங்களூரிலிருந்து 140 கிலோமீட்டரும் பெங்களூரில் இருந்து 345 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia