மதன் லால் சர்மா
மதன் லால் சர்மா (Madan Lal Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மக்களவை மற்றும் 15ஆவது மக்களவைகளில் சம்மு நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் சம்மு-பூஞ்சு நாடாளுமன்றத் தொகுதியை இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டார், ஆனால் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் இயூகல் கிசோர் சர்மாவிடம் தோல்வியடைந்தார். [2] சானோ தேவி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். கோவிட்டு-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று மதன்லால் சர்மா காலமானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia