மருத்துவ உதவியாளர்
மருத்துவச்சி (Midwifery) அல்லது மருத்துவ உதவியாளர் என்பது கருத்தரிப்பு, குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் (புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது உட்பட),[1] அவர்களின் வாழ்நாள் முழுவதும் பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் மற்றும் சுகாதாரதம் சார்ந்த ஒரு ொழிலாகும்.[2] பல நாடுகளில், மருத்துவ உதவியாளர் தொழில் ஒரு மருத்துவத் தொழிலிலாகக் கருதப்படுகிறது. [3] [4] [5] [6] [7] இத்துறையில் ஒருவர் தொழில்முறை மருத்துவ உதவியாளர் என்று அழைக்கப்படுகிறார். மருத்துவம் மற்றும் பிற சுகாதார சிறப்புகளின் தரவுத்தளங்களின் தொகுப்பான காக்ரேன் நூலகம்2013 ஆம் ஆண்டு, “பெரும்பாலான பெண்களுக்கு மருத்துவச்சி தலைமையிலான தொடர்ச்சியான பராமரிப்பு மாதிரிகள் வழங்கப்பட வேண்டும். கணிசமான மருத்துவ அல்லது மகப்பேறு சிக்கல்கள் உள்ள பெண்களுக்கு இந்த ஆலோசனையைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், பெண்கள் இந்த விருப்பத்தை கேட்க ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்க்றது.[8] மருத்துவச்சி தலைமையிலான கவனிப்பு எபிட்யூரல்களின் பயன்பாட்டைக் குறைப்பதோடு, குறைவான எபிசியோடோமிகள் அல்லது கருவிப் பிறப்புகளுடன் தொடர்புடையது என்றும் மேலும், 24 வார கர்ப்பத்திற்கு முன் குழந்தையை இழக்கும் ஆபத்து குறைகிறது எனவும் மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது. இருப்பினும், மருத்துவச்சி தலைமையிலான கவனிப்பு மணிநேரங்களில் அளவிடப்படும் நீண்ட சராசரி உழைப்புடன் தொடர்புடையது.[8] முதல் மூன்று மாதங்கள்![]() ![]() ஒரு சாதாரண கருத்தரித்தல் என்பது சுமார் ஒன்பது மாதங்கள் நீடிக்கும். இதனை மூன்று மூன்று மாதங்களாக பிரிக்கலாம். [9] முதல் மூன்று மாத க்ருத்தரித்தலை கவனிக்கும் முறையானது நாடு வாரியாக மாறுபடுகிறது. பெண்களுக்கு பொதுவாக சிறுநீர்ச் சோதனை மற்றும் முழுமையான குருதி எண்ணிக்கை, குருதி வகை, சிபிலிசு, கல்லீரல் அழற்சி, எச்.ஐ.வி, ரூபெல்லா சோதனை உட்படப் பல இரத்த பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.[9] கூடுதலாக, பெண்கள் சிறுநீர் மாதிரி மூலம் கிளமிடியா பரிசோதனையையும் செய்யலாம். மேலும் அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு அரிவாள்செல் சோகை மற்றும் தலசீமியா இருக்கிறதா எனவும் பரிசோதிக்கப்படுகிறார்கள்.[9] அனைத்து சோதனைகளுக்கும் முன் பரிசோதிக்கப்படும் பெண்ணின் சம்மதம் கட்டாயம் பெறவேண்டும். இவ்வகையான சோதனையில் பெண்ணின் குருதி அழுத்தம், உயரம் மற்றும் எடை ஆகியவை அளவிடப்படுகின்றன. அவளுடைய கடந்தகால கர்ப்பங்கள் மற்றும் குடும்பம், சமூகம் மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவையும் கணக்கில் கொள்ளாப்படுகின்றன. முதல் மூன்று மாதங்களில் பெண்கள் மீயொலி பரிசோதனையும் செய்து கொள்ளலாம். இது மதிப்பிடப்பட்ட காலக்கெடுவைக் கண்டறிய உதவும். சில பெண்களுக்கு டெளன் நோய்க்கூட்டறிகுறி பரிசோதனை போன்ற மரபணு சோதனைகளும் நடத்தப்படுகின்றன. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை போன்ற பொதுவான கோளாறுகளும் விவாதிக்கப்படுகின்றன.[9] இதனையும் காண்கமேற்கோள்கள்
நூல் பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia