மலாக்கா பறவைகள் பூங்கா
![]() மலாக்கா பறவைகள் பூங்கா மலாய்: Taman Burung Melaka; ஆங்கிலம்:Malacca Bird Park; சீனம்:马六甲飞禽公园) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ வனப்பகுதியில் உள்ள பறவைகள் பூங்கா ஆகும். இந்தப் பறவைகள் பூங்கா 23 மார்ச் 2013-இல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.[3][4] ஆசியாவிலேயே மிகப்பெரிய பறவைகள் பூங்கா என இந்தப் பூங்கா பெயர் பெற்று உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் துறை ஆய்வாளர்கள், இந்த மலாக்கா பறவைகள் பூங்காவிற்கு வருகை புரிந்து பறவைகள் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.[5] பொது2018-ஆம் ஆண்டு வரை இந்தப் பூங்கா, ஒரு தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. 2019-ஆம் ஆண்டில், மலாக்கா மாநில அரசு தலையிட்டு, இந்தப் பூங்காவை மலாக்கா உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்தது. அதன் பின்னர் மலாக்கா பறவைகள் பூங்கா எனும் பெயரை நிலைப்படுத்தியது. இந்தப் பறவைகளின் பூங்காவின் வெளிப்புறம் ஒரு தாழ்வான பச்சை வண்ண அரங்கத்தைச் சார்ந்து இருக்கிறது. அது ஒரு பசுமையான தோற்றத்தையும்; மற்றும் கிளி அமர்ந்த மாதிரியாகவும் உள்ளது. இதுவே அந்தப் பூங்காவின் ஒரு தனிப்பட்ட வரவேற்பு அடையாளம் ஆகும்.[6] இந்தப் பூங்காவில் 400-க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. [7] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia