மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம்:(Technical University of Malaysia, Malacca; மலாய்: Universiti Teknikal Malaysia Melaka) (UTeM) என்பது மலேசியா, மலாக்கா, ஆங் துவா ஜெயா, டுரியான் துங்கல் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம்; மற்றும் பல்துறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும்.[6][7] 776 ஏக்கர் பர்ப்பளவைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், தொடக்கத்தில் மலேசிய தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி (ஆங்கிலம்:(National Technical University College of Malaysia; மலாய்: Kolej Universiti Teknikal Kebangsaan Malaysia) (KUTKM) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் அதன் பெயர் மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம்: (Technical University of Malaysia, Malacca) என மாற்றப்பட்டது.[8][9] பொதுஇந்தப் பல்கலைக்கழகம் மலேசியாவின் முதல் தொழில்நுட்ப பொது பல்கலைக்கழகம்; மற்றும் 14-ஆவது பொது பல்கலைக்கழகம் ஆகும். 2007-ஆம் ஆண்டில், முழு பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது. மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வலையமைப்பில் (Malaysian Technical University Network) (MTUN) ஓர் உறுப்பினராகவும் உள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் 1971 (சட்டம் 30), பிரிவு 20-இன் கீழ், தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவில் உயர்நிலைத் தொழில்நுட்பக் கல்விக்கான "நடைமுறை மற்றும் பயன்பாடு சார்ந்த" கற்பித்தல் மற்றும் கற்றல் முறையைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக வளாகம்இரண்டு முதன்மை வளாகங்களில் எட்டு துறைகளில் கற்பிக்கப்படுகின்றன.
புள்ளி விவரங்கள்சான்று:[10] மாணவர் எண்ணிக்கை31 சூலை 2019 புள்ளி விவரங்கள்:
கல்வித் திட்டங்கள்செப்டம்பர் 2019 நிலவரப்படி, 86 கல்வித் திட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:
இணைப் பல்கலைக்கழ்கங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia