மலாக்கா பெருமம்
மலாக்கா பெருமம் ஆங்கிலம்: Malaccamax) எனப்படுவது, 25 மீட்டர் (82 அடி) ஆழம் கொண்ட மலாக்கா நீரிணை ஊடாகச் செல்லக்கூடிய மிகப்பெரிய கப்பல் தரவகையைக் குறிக்கும். பருமக் காவிகளும், மீநிறைத் தாங்கிகளும் இந்த அளவுத் தரத்துக்கு அமையக் கட்டப் படுகின்றன. மிகப் பெரிய கச்சா எண்ணெய் காவிகளுக்கு (VLCC) இத்தரம் பயன்படுத்தப்படுகிறது. இவை அரேபியாவிலிருந்து சீனாவுக்கு எண்ணெயைக் கொண்டு செல்லக் கூடியன.[1] வழமையான மலாக்கா பெரும எண்ணெய் தாங்கி மிகக் கூடிய அளவுகளாக, 333 மீ (1,093 அடி) நீளத்தையும், 60 மீ (197 அடி) வளை அளவையும், 20.5 மீ (67.3 அடி) மிதப்புயரத்தையும், 300,000 DWT தொன்னளவும் கொண்டது.[2] பிரச்சினைகள்சில சீனப்பெருமக் (Chinamax) கப்பல்களும், பெரும்பாலான முனையளவுக் கப்பல்களும், மிகப் பெரிய கச்சா எண்ணெய் காவிகளும் மலாக்கா நீரிணையூடாகச் செல்ல முடியாது. சூயெசுப்பெருமம் (Suezmax), புதியபனாப்பெருமம் ஆகிய வகைக் கப்பல்கள் இதனூடாகச் செல்ல முடியும். மலாக்கா பெருமத்துக்குப் பிந்திய கப்பல்கள் இன்னும் தொலைவான மாற்று வழிகளில் செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், இந்தோனீசியத் தீவுகளான சாவாவுக்கும், சுமாத்திராவுக்கும் இடையில் அமைந்த சுண்டா நீரிணை போன்ற வழமையான கடல்வழிகள் பெரிய கப்பல்களுக்கு ஆழம் போதாதவை. இதனால் வேறு வழிகள் தேவைப் படுகின்றன:[3]
செயற்கையாக ஆழமாக்குவதன் மூலமும் பெரிய கப்பல்களுக்குப் பாதைகளை உருவாக்கலாம்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia