மலாயா தொழிலாளர் கட்சி
மலாயா தொழிலாளர் கட்சி (ஆங்கிலம்: Labour Party of Malaya (LPM); மலாய்: Parti Buruh Se-Malaysia (PBM) என்பது 1952-ஆம் ஆண்டில் இருந்து 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மலாயாவில் (Federation of Malaya) செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி முதலில் அகில மலாயா தொழிலாளர் கட்சி (Pan-Malayan Labour Party) (PMLP) எனப்படும் மலாயா மாநிலங்களின் தொழிலாளர் கட்சிகளின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. வரலாறுதோற்றம்இந்தக் கட்சியின் வேர்கள், 1950-இல் மலாயாவில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை பிரித்தானிய மலாயா அரசாங்கம் அறிவித்த பின்னர் உருவான மாநிலத் தொழிலாளர் கட்சிகளில் உள்ளன. 1952-இல், மலாயா மாநிலக் கட்சிகள், 21 மலாயா தொழிற்சங்கங்கள் மற்றும் மலாய் இடது சார்பு அமைப்பான சபெர்காசு (Syarikat Berkerjasama Am Saiburi) (SABERKAS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கோலாலம்பூரில் கூடி அகில மலாயா தொழிலாளர் கட்சியை உருவாக்க முடிவு செய்தனர். பன்னாட்டு சோசலிசம்இந்த அமைப்பு ஆரம்பத்தில் கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாட்டை (Anti-Communist) கொண்டு இருந்தது. ஆனால் வெளிப்படையாக காலனித்துவ எதிர்ப்பைக் (Anti-Colonial) காட்டவில்லை. இந்தக் கட்சி பன்னாட்டு சோசலிசம் (Socialist International) எனும் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தது.[1] தலைவர் இராமநாதன்அப்போது அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் லீ மோக் சாங் (Lee Moke Sang). இவர் ஓர் அரசு ஊழியர். அந்தக் கட்டத்தில் அரசு ஊழியர்கள் அரசியல் பதவிகள் வகிப்பது தடை செய்யப்பட்டது. அதனால் அவர் பதவி துறப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக டி.எஸ். இராமநாதன் (D.S. Ramanathan) என்பவர் புதிய தலைவரானார்.[2] தீவிர சோசலிச எழுச்சிகளினால் (Radical Socialist Leadership), கட்சியின் நிலைப்பாடு படிப்படியாக காலனித்துவ எதிர்ப்பு வடிவத்தை எடுத்தன. ஜூன் 1954-இல், இந்தக் கட்சிக்கு மலாயா தொழிலாளர் கட்சி என மறுபெயரிடப்பட்டது.[3] மேற்கோள்கள்
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia