பிரித்தானிய மலாயா
பிரித்தானிய மலாயா (ஆங்கிலம்: British Malaya; மலாய்: Tanah Melayu British) என்பது 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்; 20-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலும்; பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட மலாயா தீபகற்பத்தின் மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் தீவு ஆகிய நிலப்பகுதிகளைக் குறிப்பிடுவதாகும்.[1] பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் (East India Company) கட்டுப்பாட்டிற்குப் பிறகு, நீரிணை குடியேற்றங்கள் பிரித்தானிய மகுடத்தின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டன. பொதுபிரித்தானிய மலாயா என்பது நீரிணை குடியேற்றங்கள் (Straits Settlements); மலாய் மாநிலங்கள் கூட்டமைப்பு (Federated Malay States); மற்றும் ஒருங்கிணைக்கப்படாத மலாய் மாநிலங்கள் (Unfederated Malay States) ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.[2] பிரித்தானிய மேலாதிக்கத்திற்கு, மலாயா நாடு மிகவும் இலாபகரமான பிரதேசங்களில் ஒன்றாக இருந்தது. உலகில் மிகப்பெரிய அளவில் ஈயம் மற்றும் ரப்பரை உற்பத்தி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் மலாயாவின் ஒரு பகுதியை ஆட்சி செய்தது. மலாயா கூட்டமைப்புபிரித்தானிய மலாயா காலத்தில் மலாயா ஒன்றியம் (Malayan Union) செல்வாக்கற்ற நிலையில் இருந்தது. அதனால் 1948-ஆம் ஆண்டில் அந்த அரசியல் அமைப்பு கலைக்கப்பட்டது. மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்று மாற்றம் செய்யப்பட்டது. 1957 ஆகஸ்ட் 31-ஆம் தேதி மலாயா நாடு முழுச் சுதந்திரம் பெற்றது. 16 செப்டம்பர் 1963-இல், மலாயா கூட்டமைப்பு; வடக்கு போர்னியோ சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் இணைந்து மலேசியா எனும் ஒரு பெரிய கூட்டமைப்பை உருவாக்கியது.[3] வரலாறுமலாயா தீபகற்பத்திற்கு வருகை தந்த முதல் பிரித்தானிய வணிகர் ரால்ப் பிட்ச் (Ralph Fitch) என்பவர் ஆவார். அவர் 16-ஆம் நூற்றாண்டில் மலாயாவுக்கு வந்தார்.[4] இருப்பினும், 1771 ஆம் ஆண்டில், பெரிய பிரித்தானிய இராச்சியம் (Great Britain), கெடாவின் ஒரு பகுதியான பினாங்கில் வர்த்தக நிலையங்களை அமைக்க முயற்சித்த போதுதான் பிரித்தானியர்கள் முறையாக மலாயா அரசியலில் ஈடுபட்டார்கள். 1819-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஒரு வர்த்தக நிலையத்தை பிரித்தானியர்கள் நிறுவினார்கள். அதன் பின்னர் 1824-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தீவின் முழு கட்டுப்பாட்டையும் பெற்றார்கள். பினாங்கில் பிரித்தானியர்கள்1850-ஆம் ஆண்டுகளில், பிரித்தானிய நிறுவனங்கள் மலாயா தீபகற்பத்தில் வர்த்தகம் செய்யத் தொடங்கி விட்டன. ஏப்ரல் 1771-இல், இந்தியாவின் மெட்ராஸ் நகரைத் தளமாகக் கொண்ட ஒரு பிரித்தானிய நிறுவனமான ஜோர்டன், சுலிவான் டி சுசா (Jourdain, Sulivan and de Souza); கெடாவில் வணிகம் செய்ய விருப்பம் கொண்டது. பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவரை, அப்போதைய கெடா சுல்தான், சுல்தான் முகம்மது ஜிவா சைனல் அடிலின் (Sultan Muhammad Jiwa Zainal Adilin II) என்பவரைச் சந்திக்க அனுப்பி வைத்தது. அப்போது பிரான்சிஸ் லைட், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கப்பலின் தளபதியாக இருந்தார்.[5] கெடா சயாம் பிரச்சினைஇந்தக் காலக்கட்டத்தில் கெடா சுல்தான் வெளிப்புற அச்சுறுத்தல்களை எதிர்க்கொண்டார். பர்மாவுடன் போரில் ஈடுபட்டிருந்த சயாம், கெடாவைத் தனக்கு அடிபணியும் அடிமை நாடாகக் கருதி வந்தது. தன் இராணுவப் படைகளுக்கு ஆதரவு வழங்குமாறு கெடாவிடம் அடிக்கடி கேட்டது. இருப்பினும் கெடா, பல சமயங்களில், சயாமுக்கு உதவி செய்வதில் தயக்கம் காட்டியது. பிரான்சிஸ் லைட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன. கெடாவை வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க ஆங்கிலேயர்கள் ஒப்புக் கொண்டால், கெடாவில் ஒரு வர்த்தக நிலையத்தை உருவாக்கவும் இயக்கவும் அனுமதிக்கலாம் என்று சுல்தான் ஒப்புதல் தெரிவித்தார்.[3] கெடா சுல்தான் முகம்மது ஜீவாஇந்தச் செய்தியை இந்தியாவில் உள்ள தன் மேலதிகாரிகளுக்கு பிரான்சிஸ் லைட் தெரிவித்தார். இருப்பினும், கிழக்கிந்திய நிறுவனம் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கெடா சுல்தான் முகம்மது ஜீவா (Sultan Muhammad Jiwa) காலமானார். அவருக்குப் பிறகு சுல்தான் அப்துல்லா மகரூம் ஷா (Sultan Abdullah Mahrum Shah) அரியணைக்கு வந்தார்.[5] இராணுவ உதவிகெடாவிற்கு இராணுவ உதவி வழங்குவதற்கு ஈடாக, பினாங்குத் தீவை பிரான்சிஸ் லைட்டிடம் புதிய கெடா சுல்தான் வழங்கினார். இந்தச் செய்தியை பிரான்சிஸ் லைட் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு தெரிவித்தார். பினாங்கைக் கைப்பற்றிக் கொள்ள கிழக்கிந்திய நிறுவனம் உத்தரவிட்டது. ஆனாலும் கெடா சுல்தான் கேட்ட இராணுவ உதவிக்கு மட்டும் உறுதி அளிக்கவில்லை. பின்னர் பிரான்சிஸ் லைட், பினாங்கைத் தன்னகப்படுத்தினர். கிழக்கிந்திய நிறுவனம் கெடாவிற்கு இராணுவ உதவிகளைச் செய்யாது எனும் நிலை இருந்த போதிலும், இராணுவ உதவி கிடைக்கும் என்று கெடா சுல்தானுக்கு பிரான்சிஸ் லைட் ஆறுதல் கூறினார்.[5] கெடா சுல்தான் ஏமாற்றம்இருப்பினும் கெடாவுக்கு இராணுவ உதவி எதுவும் வழங்க முடியாது என்பதில் கிழக்கிந்திய நிறுவனம் உறுதியாக இருந்தது. பிரான்சிஸ் லைட்டிடம் உறுதியாகக் கூறி விட்டது. ஜூன் 1788 இல், கிழக்கிந்திய நிறுவனத்தின் முடிவை, கெடா சுல்தானுக்கு பிரான்சிஸ் லைட் தெரிவித்தார். தான் ஏமாற்றப் பட்டதாக உணர்ந்த சுல்தான், பினாங்கை விட்டு வெளியேறும்படி பிரான்சிஸ் லைட்டிற்குக் கட்டளையிட்டார். ஆனால் பிரான்சிஸ் லைட், கெடா சுல்தானின் கட்டளையை மறுத்துவிட்டார். பிறை கோட்டைபிரான்சிஸ் லைட் மறுப்பு தெரிவித்ததும், கெடா சுல்தான் தன் இராணுவப் படைகளை வலுப்படுத்தினார். பினாங்குக்கு எதிரே இருந்த தன் கடற்கரைப் பகுதியான பிறையையும் (Prai) வலுப்படுத்தினார். இந்த அச்சுறுத்தலை உணர்ந்த பிரித்தானியர்கள் பிறை கோட்டையைத் தகர்த்தனர். அதன் பிறகு கெடா சுல்தானை ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி பிரித்தானியர்கள் கட்டாயப் படுத்தினர். அந்த வகையில் அந்த ஒப்பந்தம், பினாங்கைத் தன்னகப் படுத்துவதற்கான உரிமையைப் பிரித்தானியருக்கு வழங்கியது. வெல்லஸ்லி மாநிலம்அதன் பின்னர், கெடா சுல்தானுக்கு ஆண்டு வாடகையாக 6,000 இசுபானிய பெசோக்கள் (Spanish pesos) கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டது. அடுத்து, 1 மே 1791-இல், பிரித்தானியர்களின் யூனியன் கொடி முதல் முறையாக பினாங்கில் அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்டது. 1800-ஆம் ஆண்டில், கெடாவின் பிறை பகுதி பிரித்தானியருக்கு கொடுக்கப்பட்டது. கெடா சுல்தானின் வருடாந்திர வாடகை மேலும் 4,000 பெசோக்கள் அதிகரிக்கப்பட்டது. பின்னர் பினாங்கு தீவு வேல்ஸ் இளவரசர் தீவு (Prince of Wales Island) என்றும், பிறை மாநிலம் வெல்லஸ்லி மாநிலம் (Province Wellesley) என்றும் மறுபெயரிடப்பட்டன.[5] 1821-ஆம் ஆண்டில், கெடாவை சயாம் ஆக்கிரமித்தது. தலைநகரான அலோர் ஸ்டார் நகரம் சூரையாடப் பட்டது. 1842-ஆம் ஆண்டு வரை, 21 ஆண்டுகளுக்கு கெடா மாநிலத்தை சயாம் தன் ஆளுமையில் வைத்து இருந்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia