மலாயா கூட்டமைப்பு
மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது 1948 சனவரி 31 முதல் 1963 செப்டம்பர் 16 வரையில் இருந்த 11 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். ஒன்பது மலாய் மாநிலங்கள் மற்றும் பினாங்கு, மலாக்கா ஆகிய பிரித்தானிய குடியேற்றங்கள் உள்ளிட்ட 11 மாநிலங்களும் இணைந்த இக்கூட்டமைப்பு பின்னர் 1963 செப்டம்பர் 16 இல் மலேசியா என்ற பெயரில் ஒரே நாடாயின. வரலாறு1946 முதல் 1948 வரை 11 மாநிலங்களும் மலாயா ஒன்றியம் என்ற பெயரில் பிரித்தானியக் குடியேற்ற நாடாயின. மலாய் தேசியவாதிகளின் எதிர்ப்பை அடுத்து இந்த ஒன்றியம் கலைக்கப்பட்டு மலாயா கூட்டமைப்பு ஆனது. இக்கூட்டமைப்பு மலாய் ஆட்சியாளர்களின் அடையாளத்தை மீள உறுதிப்படுத்தியது. இக்கூட்டமைப்புக்குள், மலாய் மாநிலங்கள் ஐக்கிய இராச்சியத்தின் காப்புநாடுகளாக (protectorate) இருந்தாலும், பினாங்கு, மற்றும் மலாக்கா ஆகியன தொடர்ந்து பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தன. சிங்கப்பூர் மலாயாவின் ஒரு பகுதியாகக் கருதப் பட்டாலும், மலாயா ஒன்றியத்திலோ அல்லது மலாயாக் கூட்டமைப்பிலோ சிங்கப்பூர் இணையவில்லை. 1957, ஆகத்து 31 இல் மலாயாக் கூட்டமைப்பு பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. 1963-இல், மலாயா கூட்டமைப்பு சிங்கப்பூர், சரவாக், பிரித்தானிய வடக்கு போர்னியோ (இப்போதைய சபா) ஆகியவற்றுடன் இணைந்து மலேசியா என்ற பெயரில் ஒரு நாடாயின. 1965 ஆகத்து 9-இல் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிக் குடியரசாகியது. கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள்
மக்கள்
மேற்கோள்கள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia