மலையாற்றூர்

மலையாற்றூர்
சிற்றூர்
மலை உச்சிக்கு செல்லும் பாதை - மலையாற்றூர்
மலை உச்சிக்கு செல்லும் பாதை - மலையாற்றூர்
மலையாற்றூர் is located in கேரளம்
மலையாற்றூர்
மலையாற்றூர்
கேரளத்தில் அமைவிடம்
மலையாற்றூர் is located in இந்தியா
மலையாற்றூர்
மலையாற்றூர்
மலையாற்றூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°12′N 76°30′E / 10.20°N 76.50°E / 10.20; 76.50
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே)
அஞ்சல் குறியீட்டு எண்
683587[1]
வாகனப் பதிவுKL-63
அருகில் உள்ள நகரம்அங்கமாலி
சட்டமன்றத் தொகுநிஅங்கமாலி
மக்களவைத் தொகுதிசாலக்குடி
இணையதளம்Official

மலையற்றூர் (Malayattoor) என்பது இந்திய மாநிலமான, கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது அங்கமாலியில் இருந்து வட கிழக்கில் 15 கி.மீ. (9   மைல்) தொலைவில் அமைந்துள்ளது. `மலையாற்றூர் 'என்ற பெயரானது மலை, ஆறு, ஊர் ஆகிய மூன்று சொற்களின் சேர்க்கையாகும். இதன்படி மலையாற்றூர் என்பது மலை, ஆறு, ஊர் ஆகியவை சந்திக்கும் இடமாகும்.

அமைவிடம்

மலையாற்றூரானது   கொச்சியிலிருந்து 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலையாற்றூர் தேவாலயம் 609 மீட்டர் உயரமுள்ள மலையாற்றூர் மலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது புனித தாமசுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் மிக முக்கியமான கிறிஸ்தவ யாத்ரீக தலங்களுள் ஒன்றாக உள்ள இந்த புனித ஆலயம் கேரளத்திலிருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்களை அதிக அளவில் ஈர்க்கிறது. இந்த புகழ்பெற்ற தேவாலயம் குரிசுமுடியில் அமைந்துள்ளது.[2] இந்த மலை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பெரிய மலையாகும். இதை ஓரளவு சுற்றி பெரியாறு பாய்கிறது. தேவாலயத்தில் புனித தாமசின் ஆளுயர சிலையும், ஒரு பாறையில் திருத்தூதரின் பாதச் சுவடு முத்திரையும் உள்ளது. இந்த சன்னதிக்கு இப்போது சர்வதேச யாத்திரை தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி மலையாற்றூர்
மேரி இம்மாக்குலேட் தேவாலயம், விமலகிரி, மலையாற்றூர்
மலையாற்றூர் மலை உச்சியில் தேவாலயம்

வரலாறு

இயேசு கிறிஸ்துவின் திருத்தூதரான புனித தாமஸின் சமய பரப்பு பணிகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாகக் கருதப்படும் மலையாற்றூர் மலை மற்றும் ஆறு ஆகியவை சேரும் இடம் முக்கியத்துவம் பெற்றது. அவர் கி.பி 52 இல் கொடுங்கல்லூரில் கால் வைத்து பிரபலமான ஏழு தேவாலயங்களை நிறுவினார் என்று நம்பப்படுகிறது. மயிலாப்பூர் செல்லும் வழியில் இந்த மலையாற்றூரில் தங்கினார்.

நிர்வாகம்

மலையாற்றூர் சிற்றூரானது எர்ணாகுளம் மாவட்டத்தின் மலையாற்றூர்-நீலீஸ்வரம் ஊராடசியின் [3] ஒரு பகுதியாக உள்ளது. மத்திய வன வட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான வனக் கோட்டத்தின் தலைமையிடமாக மலையாற்றூர் உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் தோன்றுவதற்கு முன்பே 1914 இல் இந்த கோட்டம் நிறுவப்பட்டது. இந்தக் கோட்டத்தின் அதிகார வரம்பு எர்ணாகுளம் மாவட்டத்தின் பெரும்பகுதியை நகர்ப்புற-புறநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள காடுகள் உட்பட தமிழ்நாட்டின் எல்லை வரை உள்ளடக்கியதாக உள்ளது.

மக்கள்

மலையாற்றூரின் பெரும்பாலான மக்கள் கத்தோலிக்க மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து குடும்பத்தினரும் பாரம்பரிய குடும்ப பெயர்களால் அறியப்படுகின்றர். கிறிஸ்தவர் 1. கத்தோலிக்கர்கள் 2. பெந்தெகொஸ்தே - அசெம்ளி ஆப் காட் சர்ச் மலாற்றூர்

மருத்துவ மையங்கள்

இயற்கை மருத்துவ மையமானது நீலீஸ்வரம், பாலாயி அருகே உள்ளது. புனித தாமஸ் மருத்துவமனை மலையாற்றூரில் உள்ள முக்கிய மருத்துவமனையாகும்

  • தெய்வீக ஆடியோலஜி கிளினிக் - அங்கமாலி (டிஜிட்டல் ஹியரிங் எய்ட் சென்டர்)   மலாயாட்டூரிலிருந்து 18 கி.மீ.

விழாக்கள்

இங்கு கிறிஸ்துமஸ், ஓணம் போன்ற பாரம்பரிய விழாக்கள் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடப்படுகின்றன. கோயில்களும் தேவாலயங்களும் தங்கள் ஆண்டு விழாக்களை பெருநாள் என்று பிரபலமாக அழைக்கின்றன.

கல்வி

  1. பனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி மலாற்றூர்
  2. செயின்ட் ஜோசப் எல்பி பள்ளி மலையாற்றூர்
  3. எஸ்.என்.டி.பி மேல்நிலைப்பள்ளி நீலீஸ்வரம்
  4. புனித மேரி எல்பி பள்ளி
  5. அரசு எல்பி பள்ளி மலையாற்றூர்

அருகிலுள்ள தொடருந்து நிலையம்

அங்கமாலி க்கான காலடி (சிறிய நிறுத்தம்), ஆலுவா (பெரிய நிறுத்தம்)

அருகிலுள்ள வானூர்தி நிலையம்

கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் மலையாற்றூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[4] இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய விமான நிலையங்களுடனும், பல வெளிநாட்டு நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, புது தில்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் உள்ளன.[5]

மேலும் காண்க

குறிப்புகள்

  1. http://pincode.net.in/KERALA/ERNAKULAM/M/MALAYATTOOR
  2. http://www.malayattoorkurisumudy.in/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-06. Retrieved 2020-04-27.
  4. http://cial.aero/
  5. "How to reach". Koodalmanikyam Temple. Archived from the original on 6 February 2012. Retrieved 2013-12-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya