குவாலியர் அரசு
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() குவாலியர் அரசு (Gwalior State) மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிந்தியா வம்சத்தவர்கள், குவாலியர் பகுதியை தன்னாட்சி உரிமையுடைய நாடாக ஆண்டனர். பிரித்தானிய இந்தியா ஆட்சியில், துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட குவாலியர் அரசு, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தி ஆண்டனர். பிரித்தானிய இந்திய அரசு, குவாலியர் மன்னருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்தது.[1] 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரானோஜி சிந்தியா என்பவரால் நிறுவப்பட்ட குவாலியர் இராச்சியம், மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், புதிதாக நிறுவப்பட்ட மராத்திய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக விளங்கியது. மத்திய இந்தியாவில் மிகப்பெரிய இராச்சியமாக குவாலியர் விளங்கியது. மகாத்ஜி சிந்தியாவின் (1761–1794) ஆட்சிக் காலத்தில் குவாலியர் அரசு வட இந்தியாவில் முக்கிய சக்தியாகவும்; மராத்திய கூட்டமைப்பின் வலு மிக்க நாடாகவும் விளங்கியது. ஆங்கிலேய-மராத்தியப் போர்களின் முடிவில் மராத்தியப் பேரரசு வீழ்ச்சியடைந்ததால், குவாலியர் அரசு பிரித்தானிய இந்தியப் பேரரசிற்கு அடங்கிய மன்னராட்சி பகுதியாக மாறியது. மத்திய இந்தியாவில் மிகப்பெரிய இராச்சியமாக குவாலியர் விளங்கியது. 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு சட்டப்படி, குவாலியர் இராச்சியம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டு, இந்தியாவின் மத்திய பாரத மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [2] நிலவியல்குவாலியர் இராச்சியத்தின் மொத்தப் பரப்பளவு 64,856 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த இராச்சியம் குவாலியர் வடக்கு மண்டலம் மற்றும் மால்வா தெற்கு மண்டலம் என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. 44,082 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குவாலியர் மண்டலத்தின் வடக்கிலு, வடகிழக்கிலும், வடமேற்கிலும் சம்பல் ஆறும், இராஜபுதனா முகமை மற்றும் மத்திய மாகாணமும், கிழக்கில் அவத் மற்றும் ஆக்ரா ஐக்கிய மாகாணப் பகுதிகளும், தெற்கில் போபாலும் மேற்கில் இராஜபுதனா முகமையும் எல்லைகளாக கொண்டது.[3] உஜ்ஜைன் நகரத்தை உள்ளடக்கிய மால்வா மண்டலம் 20,774 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 1940இல் குவாலியர் இராச்சியத்தின் மக்கள் தொகை 4,006,159 ஆக இருந்தது.[4] வரலாறுபத்தாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட குவாலியர் இராச்சியத்தை, கி பி 1398இல் தில்லி சுல்தான்கள் கைப்பற்றினர். பின்னர் 1528 முதல் 1731 முடிய முகலாயர் பேரரசிற்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேய-மராத்தியப் போர்களின் முடிவில் மராத்தியப் பேரரசு சிதறியது. பின் வந்த மராத்திய கூட்டமைப்பும் ஆங்கிலேயர்களிடம் தோற்றது. பின்னர் 1731இல் குவாலியர் இராச்சியத்தின் மன்னராக 1731இல் ரானோஜிராவ் சிந்தியா முடிசூட்டிக் கொண்டார். பின்னர் அவரது சிந்தியா குல வழித்தோன்றல்கள் குவாலியர் இராச்சியத்தை இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947 முடிய ஆண்டனர். குவாலியர் மகாராஜாக்கள்மராத்திய சிந்தியா குல குவாலியர் இராச்சிய மன்னர்கள் தங்களை மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.
நிர்வாகம்நிர்வாகக் காரணங்களால் குவாலியர் அரசு வடக்கு குவாலியர் என்றும் தெற்கு மால்வா என இரண்டு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. வடக்கு குவாலியர் பிராந்தியத்தில் தற்கால குவாலியர் மாவட்டம், பிண்டு மாவட்டம், சியோப்பூர் மாவட்டம், தோன்வார்கார் மாவட்டம், இசாகார் மாவட்டம், பில்சா மாவட்டம் மற்றும் நார்வார் மாவட்டங்கள் இருந்தன. மால்வா பிராந்தியத்தில் உஜ்ஜைன் மாவட்டம், மண்டசௌர் மாவட்டம், அம்ஜெரா மாவட்டங்கள் இருந்தன. மாவட்டம் பல பர்கானாக்களாக (pargana) பிரிக்கப்பட்டது. பல கிராமங்களைக் கொண்ட ஒரு பர்கானாவிற்கு நில வரி வசூலிக்க, மற்றும் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரிக்க பட்வாரி எனும் கீழ் நிலை அதிகாரி இருந்தார். மாவட்டங்களின் நிர்வாகத்தை கவனிக்க ஒரு சுபேதார் எனும் உயர் அதிகாரி இருந்தார். இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia