மான் சிங் தோமர்
மான் சிங் தோமர் ( Man Singh Tomar ) பொ.ச.1486-இல் அரியணை ஏறிய குவாலியரின் ஒரு தோமர் இராஜபுத்திர ஆட்சியாளர் ஆவார்[1][2][3] வரலாறுமகாராஜா மான் சிங் தோமர், குவாலியரின் தோமர் இராஜபுத்திர ஆட்சியாளரான கல்யாண்மாலுக்கு மகனாவார்.[4] இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில், சில சமயங்களில் தில்லி சுல்தான்களுடன் சண்டையிட்டார். சில சமயங்களில் கூட்டாளியாக இருந்தார். இவர் பிரபலமான குர்சார் இன இளவரசி 'மிருக்னாயனி'யை மணந்தார். அவருக்கென குசாரி மகால் என்ற அரண்மனையைக் கட்டினார்.[5] மிருக்னயனியின் மீதான அன்பின் நினைவுச்சின்னமாக இது எழுப்பப்பட்டது.[6] ஒரு இராணியாக, மிருக்னாயினி, மற்ற இராணிகளைப் போல முகத்தை மறைக்க வேண்டாம் என்று சொன்ன மிகவும் அழகான மற்றும் தைரியமான பெண் என்று பாரம்பரியம் கூறுகிறது. இவர் குஜாரி மஹாலில் உள்ள மற்றவர்களைத் தவிர, மற்ற இராணிகளுடன் சடங்கு குளியல் அல்லது இசை நிகழ்ச்சிகளின் போது அமரவில்லை. தோமர் ஒரு சிறந்த போர்வீரனும் இசையின் சிறந்த புரவலருமாவார். இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் தான்சேன் இவரது அரசவையின் ஒன்பது ரத்தினங்களில் ஒருவர்.[7] இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசையிலிருந்து துருபத் வகையின் புரவலராக இருந்தார். [8] அந்த நேரத்தில் தில்லி சுல்தானாக இருந்த சிக்கந்தர் லௌதியை இவர் தோற்கடித்த பெருமைக்குரியவர். சிக்கந்தர் லௌதியுடனான மோதல்புதிதாக முடிசூட்டப்பட்ட மான் சிங் தோமர் தில்லியின் படையெடுப்பிற்கு தயாராக இல்லை. மேலும் பஹ்லுல் லௌதிக்கு 800,000 டாங்காக்கள் (காசுகள்) காணிக்கையாக செலுத்துவதன் மூலம் போரைத் தவிர்க்க முடிவு செய்தார்.[9] பஹ்லுல் லோடிக்குப் பிறகு பொ.ச.1489-இல், சிக்கந்தர் லௌதி தில்லியின் சுல்தானானார். 1500-ஆம் ஆண்டில், சிக்கந்தர் லௌதியை வீழ்த்துவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த தில்லியைச் சேர்ந்த சில கிளர்ச்சியாளர்களுக்கு மான்சிங் புகலிடம் அளித்தார். சுல்தான், மான்சிங்கைத் தண்டிக்க விரும்பி, தனது எல்லையை விரிவுபடுத்த, குவாலியருக்கு எதிராக இராணுவப் பயணத்தைத் தொடங்கினார். 1501-இல், அவர் குவாலியரின் சார்புடைய தோல்பூரைக் கைப்பற்றினார். அதன் ஆட்சியாளரான விநாயக தேவன் குவாலியருக்கு தப்பி ஓடினார். [10] சிக்கந்தர் லௌதி, பின்னர் குவாலியர் நோக்கி அணிவகுத்துச் சென்றார். ஆனால் சம்பல் ஆற்றைக் கடந்த பிறகு, அவரது முகாமில் ஒரு தொற்றுநோய் பரவியதால், அவரது அணிவகுப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மான்சிங் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லௌதியுடன் சமரசம் செய்துகொண்டார். மேலும் தனது மகன் விக்ரமாதித்தனை சுல்தானுக்கான பரிசுகளுடன் லௌதி முகாமுக்கு அனுப்பினார். தோல்பூரை விநாயக தேவனுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், கிளர்ச்சியாளர்களை தில்லியிலிருந்து வெளியேற்றுவதாகவும் உறுதியளித்தார். சிக்கந்தர் லௌதி இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வெளியேறினார். விநாயக தேவன் தோல்பூரை இழக்கவே இல்லை என்று வரலாற்றாசிரியர் கிஷோரி சரண் லால் கருதுகிறார்: இந்த கதை தில்லி வரலாற்றாசிரியர்களால் சுல்தானின் முகஸ்துதிக்காக உருவாக்கப்பட்டது. [11] 1504-ஆம் ஆண்டில், சிக்கந்தர் லௌதி தோமர்களுக்கு எதிரான தனது போரை மீண்டும் தொடங்கினார். முதலில், குவாலியரின் கிழக்கே அமைந்துள்ள மந்த்ராயல் கோட்டையைக் கைப்பற்றினார். [11] அவர் மந்த்ராயலைச் சுற்றியுள்ள பகுதியைக் கொள்ளையடித்தார். ஆனால் அவரது வீரர்கள் பலர் அடுத்தடுத்த தொற்றுநோய்களில் தங்கள் உயிரை இழந்தனர், இதனால் அவர் டெல்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [12] சிறிது நேரம் கழித்து, லோடி குவாலியருக்கு அருகில் இருந்த புதிதாக நிறுவப்பட்ட ஆக்ரா நகரத்திற்கு தனது தளத்தை மாற்றினார். அவர் தோல்பூரைக் கைப்பற்றினார், பின்னர் குவாலியருக்கு எதிராக அணிவகுத்தார். இந்த பயணத்தை ஒரு ஜிகாத் என்று வகைப்படுத்தினார். குவாலியர் கோட்டையை கைப்பற்றுவதில் தோல்வியடைந்த லௌதி, குவாலியரைச் சுற்றியுள்ள சிறிய கோட்டைகளைக் கைப்பற்ற முடிவு செய்தார். இந்த நேரத்தில் தோல்பூர் மற்றும் மந்த்ராயல் ஏற்கனவே அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. பிப்ரவரி 1507 இல், அவர் நார்வார் - குவாலியர் வழித்தடத்தில் இருந்த உதித்நகர் (உத்கிர் அல்லது அவந்த்கர்) கோட்டையைக் கைப்பற்றினார்.[13] செப்டம்பர் 1507 இல், அவர் நார்வாருக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார். அவருடைய ஆட்சியாளர் (தோமாரா குலத்தைச் சேர்ந்தவர்) குவாலியரின் தோமரர்களுக்கும் மால்வா சுல்தானகத்திற்கும் இடையே தனது விசுவாசத்தை ஏற்ற இறக்கத்துடன் வைத்திருந்தார். ஓராண்டு முற்றுகைக்குப் பிறகு கோட்டையைக் கைப்பற்றினார்.[14] திசம்பர் 1508 இல், லௌதி நார்வாரை ராஜ் சிங் கச்வாகா என்பவரை பொறுப்பாளராக நியமித்தார், மேலும் குவாலியரின் தென்கிழக்கில் அமைந்துள்ள லஹருக்கு (லஹயேர்) அணிவகுத்தார். அவர் சில மாதங்கள் லஹரில் தங்கியிருந்தார், அப்போது அவர் அண்மைப் பகுதிகளிலிருந்த கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து அகற்றினார். [15] அடுத்த சில ஆண்டுகளில், கவனம் செலுத்தினார். 1516 இல், அவர் குவாலியரைக் கைப்பற்ற ஒரு திட்டத்தை மேற்கொண்டார். ஆனால் ஒரு நோய் அவரை அவ்வாறு செய்வதைத் தடுத்தது. [15] 1516 இல் மான் சிங் இறந்தார். மேலும் சிக்கந்தர் லௌதியும் நவம்பர் 1517 இல் இறந்தார். அரண்மனைகள்15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குஜாரி மகால், ராஜா மான் சிங் தோமர் தனது குர்சாரி இராணியான மிருக்னாயனியின் மீதான காதலின் நினைவுச் சின்னமாக எழுப்பட்டத்தாகும்.[16] அவளது மூன்று விருப்பங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அவளை கவர்ந்த பிறகு. ராய் நதியில் இருந்து நிலையான நீர் வழங்கலுடன் தனி அரண்மனை வேண்டும் என்றும் மிருக்னயனி கோரினார். போரில் மன்னருடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் கோரினார். குர்ஜரி மஹாலின் வெளிப்புற அமைப்பு கிட்டத்தட்ட முழு பாதுகாப்புடன் உள்ளது. உட்புறம் இப்போது தொல்பொருள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. குவாலியர் கோட்டைக்குள்ளிருக்கும், மான் மந்திர் அரண்மனை, [17] பொ.ச.1486-க்கும் 1517-க்குமிடையே மான்சிங் தோமரால் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் அதன் வெளிப்புறத்தை அலங்கரித்த ஓடுகள் தற்போது எதுவும் எஞ்சியிருக்கவில்லை. ஆனால் நுழைவாயிலில், அவற்றின் தடயங்கள் இன்னும் உள்ளன. சிறந்த கல் திரைகளைக் கொண்ட பரந்த அறைகள் ஒரு காலத்தில் இசை அரங்குகளாக இருந்தன. இந்த திரைகளுக்குப் பின்னால், அரசகுல பெண்கள் அந்தக் காலத்தின் சிறந்த மேதைகளிடம் இசையைக் கற்றுக்கொள்வார்கள். சான்றுகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia