மாப்பிள்ளை (1952 திரைப்படம்)
மாப்பிள்ளை 1952 என்பது ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[1] வி. என். சம்பத்தம் திரைக்கதை உரையாடல் எழுதிய இப்படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கினார். இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இந்த படம் 1952, நவம்பர், 7 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. கதைஒரு அச்சகத்தில் அலுவலகப் பையனாக வேலைப் பார்க்கும் ஒரு ஏழை (டி. ஆர். இராமச்சந்திரன்) நல்வாய்பால் திடீர் பணக்காரனாக மாறுகிறான். அவன் வேலைபார்த்த அச்சக முதலாளியின் மகன் (டி. கே. இராமச்சந்திரன்) புதுப்பணக்காரனை அழித்து அவனது சவத்துக்களை அபகரிக்க சபதம் செய்கிறான். அது நடந்ததா இல்லையா என்பதே கதையாகும். நடிப்பு
தயாரிப்புமாப்பிள்ளை படத்தை டி.ஆர். ரகுநாத் இயக்கினார். வி. என். சம்பந்தம் திரைக்கதை உரையாடலை எழுதினார். நேஷனல் புரொடக்சன்ஸ் தயாரித்தது. பி. எஸ். செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, எஸ். ஏ. முருகேசன் படத்தொகுப்பு செய்தார். இந்தப் படம் நியூட்டன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. படத்தின் இறுதி நீளம் 17,647 அடி (5,379 மீ)17,647 அடிகள் (5,379 m).[4] இசைபடத்திற்கு டி. ஆர். பாப்பா, என். எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்தனர். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதினார். "டோசு கொடுக்க வேணும்" என்ற பாடல், காகா ராதாகிருஷ்ணனும், என். எம். ராஜமும் பாடுவதாக படமாக்கப்பட்டது.[3]
வெளியீடும் வரவேற்ப்பும்மாப்பிள்ளை 1952 நவம்பர் 7 அன்று வெளியாகி,[4] வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia