மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்
மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் (Market Raja MBBS) என்பது 2019 ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை சரண் எழுதி இயக்க,[1] எஸ். மோகன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஆரவ் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் காவ்யா தாப்பர், நிகேஷா படேல் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை இயக்குனரின் தம்பியான கே. வி. குகன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா செய்துள்ளார். இப்படம் 2019 நவம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
இசைஇயக்குநர் சரணின் படத்தில் முதன் முதலில் சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார்.[4][5]
வெளியீடுசந்தைப்படுத்தல் மற்றும் வெளியீடுபடத்தின் முதல் தோற்றம் 1 மே 2019 அன்று வெளியிடப்பட்டது.[6] படத்தின் முன்னோட்டம் 24 செப்டம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டு, இதுவரை பத்து லட்சம் பார்வைகள் பார்துள்ளனர்.[7][8] முதலில், படம் 8 நவம்பர் 2019 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இந்த படம் 29 நவம்பர் 2019 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia