மிஸ்டர். சந்திரமௌலி
ஜூலை 6,2018ல் தனஞ்செயன் தயாரிப்பில் வெளிவந்த மிஸ்டர். சந்திரமௌலி என்கிற திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் கார்த்திக், கவுதம் கார்த்திக் மற்றும் நடிகைகள் ரெஜினா கசான்டிரா, வரலஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் சதீஷ், மைம் கோபி, ஜகன், இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன், நடிகை விஜி சந்திரசேகர் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்[1]. நடிகர்கள்
தயாரிப்புநடிகர் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் நடிப்பார்கள் என்று இயக்குநர் திரு அக்டோபர் 2017ல் அறிவித்தார். இப்படத்தில் நடிகர் கார்த்திக் அரசு அதிகாரியாகவும், நடிகர் கவுதம் கார்த்திக் குத்துச் சண்டை வீரராகவும் நடித்துள்ளார்கள் என்று இயக்குநர் தெரிவித்தார்[2]. நடிகைகள் ரெஜினா கசான்டிரா, வரலஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரத்திலும் நடிகர் சதீஷ் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் ஆகியோரை முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார்[3]. நடிகர் கார்த்திக் நடித்த மௌன ராகம் திரைப்படத்தின் கதாபாத்திரமான சந்திரமௌலி என்று இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது[4]. ஒலிப்பதிவுஇப்படத்திற்கு பிண்ணணி இசையும் பாடல்களும் சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் சாம் சி.எஸ், லோகன், விவேக், வித்யா தாமோதரன் ஆகியோர் இயற்றியுள்ளனர். இப்படத்தின் ஆறு பாடல்களைக் கொண்ட நிலையில் ஏப்ரல் 25, 2018ல் பாடல்களை வெளியிடப்பட்டது[5]. நடிகர் சிவகுமாரின் மகளான பிருந்தா சிவகுமார் முதன் முதலாக இப்படத்திற்கு பாடியுள்ளார். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia