மெத்தில் பியூட்டைரேட்டு(Methyl butyrate) என்பது C5H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். பியூட்டைரிக் அமிலத்தின்மெத்தில் எசுத்தரான இந்த எசுத்தர் சேர்மம் மெத்தில் பியூட்டனோயேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிற எசுத்தர்களைப் போல பழச்சுவையுடன் காணப்படும் மெத்தில் பியூட்டைரேட்டு, ஆப்பிள் அல்லது அன்னாசிப் பழத்தின் இனிப்பு வாசனையை வெளிப்படுத்துகிறது [2]. அறை வெப்பநிலையில் நிறமற்றதாகவும் தண்ணிரில் சிறிதளவே கரையக்கூடிய நீர்மமான இச்சேர்மம், தண்ணிரின் மேல் எண்ணெய்ப்பசையுள்ள ஒர் அடுக்காக மிதக்கிறது. தீப்பிடித்து எரியக்கூடிய சேர்மமாக இருப்பினும் 30 பாகைசெல்சியசுவெப்பநிலையில் 40 மி.மீHg ஆவியழுத்தம் கொண்டிருக்கிறது. எனவே, மெத்தில் பியூட்டைரேட்டை அறைவெப்பநிலையில் கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் [3].
தாவரப் பொருட்களில், குறிப்பாக அன்னாசிப் பழத்தில் மெத்தில் பியூட்டைரேட்டு சிறிதளவு காணப்படுகிறது [4]. தாவர எண்ணெய்களை காய்ச்சிவடித்தல் மூலம் இதைத் தயாரிக்கமுடியும். வாசனைப் பொருளாகவும் [5], உணவுக்கு நறுமணம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படுவதால், மெத்தில் பியூட்டைரேட்டை பெருமளவில் தயாரிக்கிறார்கள்.
பயோடீசலில்[6] காணப்படும் பெரிய கொழுப்பு அமில மெத்தில் எஸ்டர்களை எரிப்பதற்கான ஒரு துணை எரிபொருள் கூறாக எரிபொருள் ஆய்வுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், குறுகிய சங்கிலி நீளம், எரிபொருள்களின் எதிர் வெப்பநிலைக் குணகத்தை நன்கு உற்பத்தி செய்யாமைப் பண்பு, ஆரம்பத்திலேயே CO2 உருவாக்கம் போன்ற தன்மைகளால் மெத்தில் பியூட்டைரேட்டு ஒரு பொருத்தமற்ற பயோடீசல் துணை எரிபொருளாகக் கருதப்படுகிறது [7]
↑Flath, Robert A.; Forrey, R. R. (1970). "Volatile components of Smooth Cayenne pineapple". Journal of Agricultural and Food Chemistry18 (2): 306–309. doi:10.1021/jf60168a018.