பியூட்டைல் அசிட்டேட்டு(Butyl acetate) என்பது C6H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். என் – பியூட்டைல் அசிட்டேட்டு, பியூட்டைல் எத்தனோயேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த எசுத்தர் சேர்மம் நிறமற்றதாகவும், அறை வெப்பநிலையில் தீப்பிடித்து எரியக்கூடிய நீர்மமாகவும் காணப்படுகிறது. பியூட்டைல் அசிடேட்டு வேறு சில வேதிப்பொருட்களுடன் சேர்ந்து பல வகையான பழங்களில் காணப்படுகிறது. வாழை அல்லது ஆப்பிள் பழத்தின் இனிப்பு வாசனையை வெளிப்படுத்துகிறது.
சாக்கலேட்டு, ஐசுகிரீம், பாலாடைக்கட்டிகள், மற்றும் வேகவைத்த உணவுப் பொருட்களில் நறுமணமூட்டும் செயற்கைப் பழவாசனைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பியூட்டைல் அசிடேட்டு பெரும்பாலும் மிதமான முனைவுநிலை உயர் கொதிநிலைக் கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஐசோபியூட்டைல் அசிட்டேட்டு, இரண்டாம் நிலை- பியூட்டைல் அசிட்டேட்டு மற்றும் மூன்றாம்நிலை - பியூட்டைல் அசிட்டேட்டு என்பன பியூட்டைல் அசிட்டேட்டின் பிற மாற்றியன்களாகும்.
தயாரிப்பு
கந்தக அமிலவினையூக்கியின் முன்னிலையில், பின்னோட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பியூட்டனால் உடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து பியூட்டைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வினை பிசர் எசுத்தராக்கல் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது :[7]
.
இயற்கைத் தோற்றம்
பியூட்டைல் அசிட்டேட்டு இயற்கையில் குறிப்பாக சிவப்பு ஆப்பிள் வகையில் காணப்படுகிறது. தேனீக்களில் காணப்படும் கோசுசெவ்நிக்கோவ் சுரப்பிகளில் சுரக்கும் இனயீர்ப்பு சுரப்புகளில் பியூட்டைல் அசிட்டேட்டு உள்ளது.
↑ 2.02.12.22.3Acetic acid, butyl ester in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-06-28)