ஈத்தைல் பார்மேட்டு
ஈத்தைல் பார்மேட்டு (ethyl formate) என்பது ஒரு கார்பாக்சிலிக் அமிலமான பார்மிக் அமிலம் ஒரு எத்தனால் என்ற ஆல்ககாலுடன் வினைபுரிந்து உருவாகும் எசுத்தர் ஆகும். பார்மிக் அமிலமும் மெத்தனோயேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுவதால் இச்சேர்மம் எத்தில் மெத்தனோயேட்டு என்று அழைக்கப்படுகிறது. ரம் என்று சொல்லப்படும் மதுபான வகையின் மணம் மற்றும் ராசுபெரி பழத்தின் நறுமணத்தில் சிறிதளவு ஈத்தைல் பார்மேட்டு உண்டு.[1] எறும்புகளின் உடலில் இருந்தும் தேனீக்களின் கொட்டும் குழலிலும் இது தோன்றுகிறது.[2] பயன்பாடுஎத்தில் மெத்தனோயேட்டை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பொதுவாக பாதுகாப்பானது என்று அறிவித்துள்ளது.[3] ஆனால் அமெரிக்கத் தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், கண்கள், தோல், சளிச்சவ்வு மற்றும் மனிதர், விலங்குகளின் சுவாசக்குழாய்களில் எத்தில் மெத்தனோயேட்டு எரிச்சலை உண்டாக்கும் என்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளது.[4] தொழிற்சாலைகளில் செல்லுலோசு நைட்ரேட்டு, செல்லுலோசு அசிட்டேட்டு, எண்ணெய்கள் மற்றும் கொழுப்புப்பசை முதலியவற்றை கரைப்பதற்கு கரைப்பானாக ஈத்தைல் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது. அசிட்டோனுக்கு மாற்றாகவும் இதை உபயோகிக்க முடியும். இதைத்தவிர தொழிலாளர்கள் ஈத்தைல் பார்மேட்டை கீழ்கண்டவாறு பலவாறாகப் பயன்படுத்துகின்றனர்:[4]
விண்வெளியில்பால்வெளியில் உள்ள சாகிடாரியசு பி2 எனப்படும் தனுசு பி2 பகுதியின் மேகக்கூட்டத்தில் ஈத்தைல் பார்மேட்டை வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். செருமனியில் உள்ள மாக்சு பிளாங்க் ரேடியோ வானியல் நிறுவனத்தினர், எசுப்பானியாவின் 30 மீட்டர் வானொலித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி புதிய விண்மீனுக்கு அருகில் உள்ள வெப்பப் பகுதிகளில் இருந்து உமிழப்படும் கதிர்வீச்சு நிறமாலை பற்றி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் அங்கு ஈத்தைல் பார்மேட்டின் 50 மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia