முகுந்தராயபுரம்
முகுந்தராயபுரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] வேலூர் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதி வேலூர் மாவட்டத்தில் அடங்கியதாக இருந்தது.[3] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 206.16 மீ. உயரத்தில், (12°58′20″N 79°17′15″E / 12.9721°N 79.2874°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு முகுந்தராயபுரம் அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், முகுந்தராயபுரம் ஊரின் மொத்த மக்கள்தொகை 7,070 பேர் ஆகும். இதில் 3,559 பேர் ஆண்கள் மற்றும் 3,511 பேர் பெண்கள் ஆவர்.[4] போக்குவரத்துதொடருந்து போக்குவரத்துமுகுந்தராயபுரத்தில் தொடருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காட்பாடி வழியாக மற்றும் மறுமார்க்கத்தில் காட்பாடி வழியாக சென்னை செல்லும் புறநகர் தொடருந்துகள் முகுந்தராயபுரம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.[5] அரசியல்முகுந்தராயபுரம் பகுதியானது, காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia