முரண் (திரைப்படம்)
முரண் (Muran) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் இராஜன் மாதவ் எழுதி இயக்கியிருந்தார்.[1] இப்படத்தில் சேரன் உடன் பிரசன்னா, ஹரிப்ரியா, நிகிதா துக்ரல், ஜெயப்பிரகாசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2010 இல் தொடங்கப்பட்டு[2] சூலை 2011 இல் நிறைவடைந்தது.[3] கதை இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளை சித்தரிக்கிறது.[4] இத்திரைப்படம் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கிய உளவியல் அதிரடித் திரைப்படமான ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ டிரெய்ன் (1951) என்ற திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டது.[5][6] யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டது.[7] முரண் 2011 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டு ஒட்டுமொத்த நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia